பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் 377 வன்னிய தட்டான் வடிவழகன் கம்மலிலேயும் கொஞ்சம், கொஞ்சம் பழுது யிண்ணாண்டி கொப்புக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க ஆச்சாரியண்ணன் ஆரழகன் வன்னிய தட்டான் வடிவழகன் கொப்பிலேயும் கொஞ்சம் கொஞ்சம் பழுது யிண்ணாண்டி காப்புக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க ஆச்சாரியண்ணன் ஆரழகன் வன்னிய தட்டான் வடிவழகன் காப்புலேயும் கொஞ்சம் கொஞ்சம் பழுது யிண்ணாண்டி தாலிக்குத்தான் அரும்பு வச்சாண்டி-எங்க ஆச்சாரியண்ணன் ஆரழகன் வன்னிய தட்டான் வடிவழகன் தாலியிலேயும் கொஞ்சங் கொஞ்சம் பழுது யிண்ணாண்டி சேகரித்தவர்: இடம்: கவிஞர் சடையப்பன் தருமபுரி மாவட்டம்.

     தங்கச் சுரங்கம்

கோலாரிலுள்ள தங்கச் சுரங்கத்தில், தொழில் செய்யும் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களிலே ஒருவன் தனது தாயாரை விட்டுத் தனியாக அங்கே வாழ்கிறான். சுரங்கத்தினுள் இறங்கும்பொழுது திரும்பி வந்தால்தான் நிச்சயம் என்று அவன் அஞ்சுகிறான். அன்னையை நினைத்துக் கொண்டு தைரியமாக இறங்கிச் செல்கிறான். அவன் உள்ளிருக்கும்போதே தங்கம் எடுப்பதற்காகப் பாறைகளை வெடி வைத்துத் தகர்க்கிறார்கள். இவ்வாறு நம் நாட்டார் ஆபத்துகளுக்கு உட்பட்டு தைரியமாக வேலை செய்து தங்கம் எடுத்துக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் வேலை செய்தும் பட்டினியாக இருக்கும்பொழுது வெள்ளைக்காரன் தங்கக் கல்லையெல்லாம் கப்பலிலே ஏற்றித் தன் நாட்டுக்கு அனுப்புகிறான். அவன் தன் நிலையை மட்டுமல்லாமல் நாட்டின் நிலையையும் நினைத்து வருந்துகிறான். பின்வரும் பாடல் சுரண்டலை எதிர்க்கும் தொழிலாளியின் உணர்வையும் அவனது நாட்டுப்பற்றையும் வெளியிடுகிறது.