பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418

தமிழர் நாட்டுப் பாடல்கள்


ஓடாதே மானே
ஒளிந்திருப்பான் வேடன் ஒட்டங்கண்ட மானை
வேடன் துயந்தானே
பன்னீரும் செம்பும்
பாலன் தலைமேலே
பன்னிருகால் ரெண்டு பன்னிருகால் மூணு
பன்னிருகால் நாலு
பன்னிருகால் ஐந்து
பன்றி குத்தப் போன
பாலன் வரக் காணோம் பன்றிகளைப் பார்த்தால் பாரமலை போல
சிங்கம் குத்தப் போன
சீமான் வரக் காணோம் சிங்கங்களைப் பார்த்தால்
சிறு புலிகள் போல
பன்னிரு காலாறு
பன்னிரு காலேழு பன்னிருகாலெட்டு
பண்ணிப் பதித்தாண்டி பண்ணிப்பதித்தாண்டி பத்துலெட்சம் பொன்னு
எண்ணிப் பதித்தாண்டி எட்டுலட்சம் பொன்னு
பாப்பாரப் பெண்ணே முகப்பாயோ தண்ணி
விருந்தாடிப் பெண்கா(ள்)
இருந்தாரிப் போங்க
இருபதிகா ரெண்டு
இருபதிகா மூணு
இருபதிகா நாலு
இருக்க நல்ல சோலை
இருக்க தல்ல சோலை
குளிக்க நல்ல பொய்கை இருக்கையிலே கண்டேன் திருப்பதி மலையை