பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
423

உழவும் தொழிலும்


வெள்ளிப்பிடி யருவா
விடலைப்பிள்ளை கையருவா
சொல்லியடிச் சருவா
சுழட்டுதையா நெல்கருதை

வட்டார வழக்கு: கருது-கதிர் நேத்து-நேற்று; மறந்திராதே -மறந்திடாதே; அருவா-அரிவாள்.

சேகரித்தவர்: இடம்:


S.M. கார்க்கி {{சிவகிரி, நெல்லை மாவட்டம். S.S.போத்தையா விளாத்திகுளம், நெல்லைமாவட்டம். வாழப்பாடி சந்திரன் வாழப்பாடி,சேலம்மாவட்டம். சடையப்பன் அரூர்,தருமபுரிமாவட்டம்.

தூக்கிவிடும்!

  கதிர்க் கட்டை தூக்கிவிடும்படி அறுவடைக்கு வந்த கையாளான பெண் வேண்டிக் கொள்கிறாள். களம் தூரமாயிருக்கிறதாம். அங்கே அவருடைய மாமன் வட்டம் உதறக் காத்திருக்கிறானாம்.

ஊரோரம் கதிரறுத்து
உரலுப்போல கட்டுக்கட்டி
தூக்கிவிடும் கொத்தனாரே
துரகளம் போய்ச்சேர
தும்பமலர் வேட்டி கட்டி
தூக்குப்போணி கையிலேந்தி
வாராக எங்க மாமா
வட்டம் உதறுதற்கே

வட்டார வழக்கு: போனி-பாத்திரம் (சோறு கொண்டு வருவதற்குப் பயன்படும்); வாராக-வருகிறார்கள். (க என்பது ஹ என்று உச்சரிக்கப்படும்)

 சேகரித்தவர்:          இடம்:

S.M. கார்க்கி சிவகிரி,

                     நெல்லை.