பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

442 தமிழர் நாட்டுப் பாடல்கள்

அல்லடா தில்லாலே டப்பா அலுக்கு குலுக்கு டப்பா செம்மை குள்ளத்தாரா சிந்து செழித்த தஞ்சாவூர் முந்து-ததிம்மிதா

சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்

இடம்: அரூர் தாலுகா, தருமபுரி மாவட்டம்.

         மாலுக்கடை

உழவன் விளைவிக்கும் பண்டங்களின் விலையைப் பெரிய வியாபாரிகளும், வர்த்தகச் சூதாடிகளும் குறைத்து விடுகிறார்கள். அதனால் எவ்வளவு நன்றாக மேனி கண்டாலும் விவசாயிக்கு பணம் மிஞ்சுவதில்லை.


மாலுக்கடை, கமிஷன் வியாபாரிக்கடை. அவர்களுடைய வியாபாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி, மாலுக்கடையை ஏன் கடவுள் படைத்தார் என்று கேட்கிறான். இது முதலாளித்துவ அமைப்பின் சுரண்டல் இயந்திரத்தின் ஒருபகுதி என்று அவனால் உணர முடியவில்லை. கடைதான் அவனை மோசம் செய்வதாக அவன் எண்ணுகிறான்.


களையெடுக்கும் கடமங்குளம்

கணக்கெழுதும் ஆலமரம்

விலை பேகம் மாலுக்கடை

விதிச்சாரே உடையாளி

தரகருக்கும் தட்டப் பாறை

போட்டுக் கட்டும் பொன்னிலுப்பை

விலைபேசும் மாலுக்கடை

விதிச்சாரே உடையாளி

வட்டார வழக்கு: விதிச்சாரே-விதித்தாரே, மாலுக்கடை-கமிஷன் கடை.


சேகரித்தவர்: S.M .கார்க்கி

இடம்: வட்டாரம் சிவகிரி வட்டாரம், நெல்லை மாவட்டம்.