பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பாரி 493

மூடநம்பிக்கை காரணமாக விபூதி போடுவது, பூசை போடுவது, தண்ணீர் இறைப்பது போன்ற சிகிச்சை முறைகளை கையாளுகி றார்கள். விஞ்ஞான ரீதியால் நோயைக் கண்டு பிடித்து, அதனைப்போக்க முயலும் நவீன வைத்தியர்களிடம் கிராம மக்களில் பெரும்பாலோர் செல்வதில்லை. நாட்டு வைத்தியர்களிடம் சென்று அவர் சொன்ன மருந்து வகைகளை வாங்க முடியாமல் குழந்தையைப் பறிகொடுத்த தாய் தனது மடமையை நினைத்துப் புலம்புகிறாள்.

மச்சுவிடு கச்சேரி மாய வர்ண மாளிகை மைந்தன் நலங்கினதும் மாய முடி தாக்கினதும் மன்னவரும் தேவதையும் மருந்து வகை சிக்காமல் மைந்தனைப் பறி கொடுத்தோம் மாபாவி ஆனோமய்யா குச்சுவீடு கச்சேரி கோல வர்ண மாளிகையில் குழந்தை நலங்கினதும் குழந்தை முடி தட்டினதும் கொண்ட வரும் தேவதையும் கொழுந்த வகை தேடினததும் கொழுந்த வகை சிக்காமல் குழந்தை பறி கொடுத்தோம் கொடும்பாவி ஆனோமய்யா

வட்டார வழக்கு: நலங்கினது-நலம் கெட்டது; மன்னவரும் தேவதையும்-கணவரும் மனைவியும்.

உதவியவர்: இடம்: நல்லம்மாள் சேலம் மாவட்டம். சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி

   வயிற்று வலி தீரவில்லை

தந்தை நெடுநாளாக வயிற்று வலியால் துன்பப்பட்டு பல இடங்களில் மருத்துவம் பார்க்கிறார். பெரிய பெரிய பண்டிதர்கள் எல்லாம் வைத்தியம் பார்த்தும் அவருக்குக் குணமடையா A519 - 32