பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 501

             ஒப்பாரி 

              சிறப்பு
   ஆக்கச் சிறு விடோ 
   ஆவி போகமே விடோ?-நான் 
   ஆக்கி வெளியே வந்தா 
   அம்பலத்தார் ஏசுவாக 
   பொங்கச் சிறுவிடோ, 
   புகைபோகமே விடோ, 
   பொங்கி வெளியே வந்தா- 
                    என்னைப் 
   பூலோகத்தார் ஏசுவாக. 
   வெள்ளைத் துகில் உடுத்தி 
   விதியிலே போனாலும் 
   வெள்ளாளன் பிள்ளையென்பார், 
   வீமனோட தங்கையென்பார். 
   பச்சைத் துகிலுடுத்தி 
   பாதையிலே போனாலும் 
   பார்ப்பான் பிள்ளையென்பார் 
   பரமனுட தங்கையென்பார். 
   பத்துவகைப் பச்சிலையாம், 
   பார்த்துரசும் மாத்திரையாம், 
   பார்த்துரசும் மாத்திரையும் 
   பார்த்துரசுக்குள்ள 
   எமன் அழைத்தானோ? 
   எட்டடித்தாம்பாளம் நம்ம வாசலிலே 
   ஏலரிசிப் பாயாசம்-இருந்து பரிமாற 
   எட்டு மணியாச்சு. 
   பத்தடித்தாம்பாளம்,நம்ப வாசலிலே 
   பச்சரிசிப்பாயாசம்-பார்த்துப் 
                   பரிமாற 
   பத்து மணி நேரமாச்சு.


            சேதம்


    உச்சிமேகம் கூடி 
    ஊருக்கே சேதமென்ன? 
    ஊருக்கே சேதமில்லை 
    உங்களுக்கே சேதமாச்சே! 
    கருமேகம் கூடி 
    கருணனுக்கே சேதமென்ன? 
    கருணனுக்குச் சேதமில்லை நாங்க 
    கவலைக்கு ஆளானோம்: