பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வங்கள் 45 சபதம் ஏற்றுக் கொள்வர். மனிதனது கோபத்தைத் தணிப்பதற்காகக் கையாளும் முறைகளையே தெய்வங்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று மக்கள் நம்பினர். அவ்வாறு விழாக் கொண்டாடும்போது உடுக்கடித்து மாரியம்மன் புகழைப் பாடிக்கொண்டு தலையில் தீச்சட்டி தாங்கிக் கொண்டு சிலர் வருவர். அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். உடுக்குத் தாளத்தோடு சேர்ந்துவரும் பாட்டு மாரியம்மனின் பக்தர்களைப் பரவசப்படுத்தும். மாரியம்மன் பாட்டு -1 தோட்டம் துறந்தல்லோ-மாரிக்கு தொண்ணுறு லட்சம் பூவெடுத்து, வாடித் துறந்தல்லோ-ஆயிரம் கண்ணாளுக்கு வாடா மலரெடுத்து, கையாலே பூ வெடுத்தா-மாரிக்கு காம்பழுகிப் போகுமிண்ணு விரலாலே பூ வெடுத்தா வெம்பிடு மென்று சொல்லி தங்கத் துரட்டி கொண்டு-மாரிக்கு தாங்கி மலரெடுத்தார் வெள்ளித் துரட்டி கொண்டு வித மலர்கள் தானெடுத்தார் எட்டாத பூ மலரை-மாரிக்கு ஏணி வைத்துப் பூ வெடுத்தார் பத்தாத பூ மலரைப் பரண் வைத்துப் பூ வெடுத்தார் அழகு சுளகெடுங்க-மாரிக்கு அமுது படி தானெடுங்க வீசும் களகெடுங்க-மாரிக்கு வித்து வகை தானெடுங்க உப்பாம் புளி முளகா-ஆயிரம் கண்ணாளுக்கு ஒரு கரண்டி எண்ணெய் அமுது கடலைச் சிறு பயறு காராமணி மொச்சையம்மா அவரை, துவரை முதல்-ஆயிரங் கண்ணாளுக்கு 519 - 4