பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

538 தமிழர் நாட்டுப் பாடல்கள்


மாமியாள் கொடுமையினால்

மஞ்சனில்லாப் பாவியானேன்.


சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்

இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.


        அவசரம்

அவளுடைய தந்தை இறந்த செய்தி கேட்டு வேகமாக பிறந்த வீட்டிற்கு வரும் மகளை வழியில் தந்தையின் நண்பர்கள் தங்கிப் போகச் சொல்லுகிறார்கள். அவள் முடியாது என்று சொல்லி தந்தையின் முகம் பார்க்க ஓடி வந்து விட்டாள்.


தலைமயிரை விரிச்சு விட்டு

தருமபுரி போய் நிண்ணா-என்னைத்

தருமபுரி வைத்தியரு

தங்கிப்போ இண்ணாரு-நான்

தங்க முடியாது-எங்கப்பா வீட்டு தங்கரதம் சிக்காது

கூந்தலை விரிச்சி விட்டு

கோசலம் போயி நிண்ணா கோசல வைத்தியரு-என்னைக்

குந்திப் போ இண்ணாரு

குந்த முடியாது-னங்கப்பா வீட்டு

பொன்னுரதம் சிக்காது.


சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்


இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.


   மணை போட யாருமில்லை

ஆண்டுதோறும் மகளையும், மருமகனையும் அழைத்து மணைபோட்டு வரிசை கொடுத்து தந்தை வீட்டில் உபசாரம் செய்வது வழக்கம். தந்தை இறந்துவிட்டார். அடுத்த ஆண்டில் மாரியம்மன் திருவிழா வரும். ஆனால் அவளை அழைத்து அன்போடு பாராட்ட யார் இருப்பார்கள்?

வாரம் ஒரு நாளு

வள்ளியம்மை திருநாளு

வள்ளியம்மை திருநாளில்