பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

542 தமிழர் நாட்டுப் பாடல்கள்

சிந்திட்டன் கண்ணீரை திரும்பினன் தென் மதுரை பொன்னு சரகு சட்டி புது சம்பா நெல்லெடுத்து பொறந்த ஏடு போலா மிண்ணும் பொன்னு மலை தாண்டி பொற் கொடி ஆறு தாண்டி போய்ப் பார்த்தேன் தாய் வீட்டை பூட்டிக் கிடக்குதுங்கோ பொங்கார மாகுதுங்கோ வடிச்சிட்டன் கண்ணீரை வந்திட்டன் தென் மதுரை

சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன் இடம்: அரூர், சேலம்.

கூப்பிடுவார் யாருமில்லை

தாயும் தந்தையும் இறந்து விட்டனர். மகளுக்கு திருமணமா கவில்லை. தன்னைத் தகுந்த வரன் பார்த்து இனி யார் மணம் செய்து வைப்பார்கள் எண்றெண்ணி வருந்துகிறாள்.

மாரியம்மன் கோயிலிலே மங்கை குளி குளிச்சேன் மாதுளங்கா பட்டுடுத்தி மாரியை வணங்கி வந்தேன் மனையும் எதுராச்சி மலங்கழுகு சயணமாச்சி-நான் கொட்டியும் தண்ணீராய் கொளத்திலே பூத்திருந்ததன் குயிலா குணமறிஞ்சி கூப்பிடுவார் யாருமில்லை காளியம்மன் கோயிலிலே கன்னி குளி குளிச்சி கைலங்கிரி பட்டுடுத்தி காளியை வணங்கி வந்ததன் கானாறு எதிராச்சி காக்கா சயண மாச்சி