பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

564

தமிழா் நாட்டுப் பாடல்கள்


 டம் நாளை ஒருவனிடம் என்று இருக்கும் செல்வந்தான் என்னை விட்டுப் போய் விட்டது என்றிருந்தேன். ஆனால் நிலையானது என்று நான் எண்ணிய என் கணவனும் என்னை விட்டுப் பிரிந்து போக வேண்டுமா? நான் முன்னம் இருந்த நிலையை எண்ணி ஏங்க வேண்டுமா? என்று முகம் சோர்ந்து மனம் சோர்ந்து அழுகிறாள்.

கல்லு துரிஞ்சி மரம்
கல்கண்டு காய்க்கும் மரம்
கல்கண்டு தின்னப்பொண்ணு-நான்
கைசோர்ந்து நிக்கறனே
முள்ளு துரிஞ்சி மரம்
முட்டாயி காய்க்கும் மரம்
முட்டாயி தின்னப்பொண்ணு-நான்
முகஞ்சோந்து நிக்கிறனே

வட்டார வழக்கு: சோந்து-சோர்ந்து.


சேகரித்தவர்:

இடம்:

கவிஞர் சடையப்பன்

அரூர்,

தருமபுரி மாவட்டம்.

நிறுத்துனாங்க கங்கையிலே

தனிமை மிகவும் கொடியது. இணைந்து இல்லற வாழ்க்கை நடத்தி வந்த தம்பதிகளில் ஒருவர் பிரிந்து விட்டால், தனிமையில் இருப்பவர் நிலை பரிதாபத்துக்குரியது. ஆண் மகனென்றால் மறுமணம் செய்து ஒரளவு தன் துன்பத்தை மாற்றிக் கொண்டு புது வாழ்வு தொடங்குவான். பெண்ணால் அப்படி வாழ முடியுமா? கணவனுடன் அவள் முழுமை பெறுகிறாள். அவன் இறந்த பின்பு உயிர் வாழும் நடைப்பிணமாகத்தான் இருக்க முடியும். உயிர் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்குமே தவிர் வாழ்க்கை சுவையில்லை.

தனிமை என்ற கொடுமையில் அவள் கஷ்டப்படுவதை மற்றவர்கள் உணருகிறார்களா?

நீளக் கெணறு வெட்டி
நெலக் கெணறு செட்டெறக்கி
நீள மிண்ணு பாக்காம-என்னை
நிறுத்தனங்கெ கெங்கையிலே