பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெய்வங்கள் 61

           மன்னாதி மன்னவரே 
           மகா தேவா என் பெருமாள் 
           அண்ணாவே வாருமிப்போ 
           அதிகாரி ஏ கறுப்பா 
           எல்லை கடந்து வாரும் 
           எல்லை கல்லு தாண்டி வாரும் 
           ஆறு கடந்து வாரும் 
           அதிகாரி ஏ கறுப்பா 
           ஊறுதடம் பிடித்து 
           உத்தமனே வாருமிப்போ 
           தெற்கு பார்த்த வீட்டிற்கு 
           தேவா உமையழைத்தேன் 
           வடக்கு பார்த்த எல்லைக்கு 
           வல்லவனே உமையழைத்தேன். 
           மேற்க பார்த்த தன் பதிக்கு 
           மேக 'உமையழைத்தேன்' 
           கிழக்க பார்த்த எல்லைக்கு 
           கிளி மொழியே நானழைத்தேன்

குறிப்பு: வீடு எந்தப்பக்கம் பார்த்திருக்கிறதோ அதற் கேற்றாற்போல், தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்று சொல்லுவார்கள்.

              தெய்வம் கூறுவது
         என்னடா சிறுபயலே 
         என்னை அழைத்ததென்ன 
         பம்பை பதனமடா 
         பாலன் சிறு குழந்தை 
         உடுக்கு பதனமடா 
         உடையவன் வந்தேனிப்போ 
         சொன்ன சொல் தவறமாட்டேன் 
         சொற் பிழைகள் இல்லாமல் 
         நாவில் குடியிருந்து 
         நானே குறி பாடுரண்டா 
         இந்த மனை தனக்கு 
         எடுத்தேன் சிறு ஏட்டை

A519-5