பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 தமிழர் நாட்டுப் பாடல்கள்

தொட்டிலிட்ட நல்லம்மான் பட்டினியாப் போராண்டா பட்டினியாய் போற மாமன்-

                  உனக்கு பரியம் கொண்டு வருவானோ?
 தனது அண்ணன் தம்பிமார்களை ஏற்றிப் போற்றுவதும், கேலி செய்து மகிழ்வதும், தமிழ்ப் பெண்களின் தாலாட்டு மரபு.
 பாமரர் தாலாட்டில் தொட்டில் செய்த தச்சனையும் காப்புச்செய்து தந்த தட்டானையும் இன்னும் இவர் போன்ற பிற தொழிலாளர்களையும் பாராட்டிப் பாடும் வழக்கமும் உள்ளது.
  அது போலவே பூக்கொண்டுவரும் பண்டாரமும், போற்றுத லுக்கு உரியனாவான்.
 தாலாட்டுகளில் உறவினர் முறையை உறுதிப்படுத்திக் கொள்ளும் சடங்கு அன்று ஒவ்வொருவரும் குழந்தைக்கு அளிக்கும் பரிசுகள் வரிசையாகக் கூறப்படும்.

பால் குடிக்கக் கிண்ணி, பழந்திங்கச் சேணாடு நெய் குடிக்கக் கிண்ணி, முகம் பார்க்கக் கண்ணாடி கொண்டைக்குக் குப்பி கொண்டு வந்தான் தாய்மாமன்

ஆனை விற்கும் வர்த்தகராம்

                 -உன் மாமன் சேனைக் கெல்லாம் அதிகாரியாம் 

சின்னண்ணன் வந்தானோ

            -கண்ணே உனக்கு சின்னச் சட்டை கொடுத்தானோ 
                  உனக்கு பட்டு ஜவுளிக்ளும் கண்ணே 
                  உனக்குப் பல வர்ணச் சட்டைகளும் 

பட்டுப் புடவைகளும் கண்ணே-

                      உனக்கு 

கட்டிக் கிடக் கொடுத்தானோ! பொன்னால் எழுத்தாணியும்

            -கண்ணே உனக்கு மின்னோலைப் புஸ்தகமும் கன்னாரே! பின்னா ரேன்னு 
                    -கண்ணே கவிகளையும் கொடுத்தானோ!