பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

84 தமிழர் நாட்டுப் பாடல்கள் ஆனி மாசக் கடைசியிலே-கண்ணே நீ அடியெடுத்து வைக்கயிலே அகஸ்மாத்தா ஆவணியில்-கண்ணே தீ அரண்மனைக்குப் போகையிலே ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே-நீ அப்பன் வீடு தங்கையிலே கார்த்திகை மாசத்திலும்-கண்ணே கடவுளுக்குக் கையெடடி.


தாயின் குடும்பம் எத்தொழிலைச் செய்து வாழ்கிறதோ அத்தொழில் தாலாட்டில் பெருமையாகக் கூறப்படுகிறது. மீனவர் குலத்தைச் சேர்ந்த தாய் மீன் பிடித்து, விற்றதைப் பற்றியும், விற்ற பணத்தில் அரைமூடி செய்ததைப் பற்றியும் பாடுகிறாள்.


ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே அம்புட்டுதாம் அப்பனுக்கு வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி விதம்விதமாஅம்புட்டிச்சாம், அரண்மனைக்கு ஆயிரமாம் ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி அப்பன் விற்று வீடுவர அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி ஆச்சரியப் பட்டார்களாம், பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான் பிரியமாக ஆறெடுத்தேன் அயலூரு சந்தையிலே-கண்ணே நான் ஆறு மீனை விற்றுப் போட்டேன். அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன். அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான் அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன் அழகைப் பார்த்து அரண்டார்களே.

அத்திமரம் குத்தகையாம் ஐந்துலட்சம் சம்பளமாம் சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச் சர்க்கார் உத்தியோகமாம்