பக்கம்:தமிழர் நாட்டுப் பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாலாட்டு 93 தெற்கு ஒரு தாழை தென் லட்சம் பூப்பூ க்கும் தென்றல் அடியாதோ செல்ல மகன் கண்ணயர? வைகை பெருகிவர வாளை மீன் துள்ளிவர துள்ளி வந்த மீனுக் குல்ல-வேலவா தூண்டி வலை போட்டாரே பத்து வருஷமோ பாலனில்லா வாசலிலே கைவிளக்கு கொண்டு கலி தீர்க்க வந்தவனோ? விளக்கிலிட்ட எண்ணெய் போல வெந்துருகி நிக்கயில கலத்திலிட்ட பால்போல கைக்குழந்தை தந்தாரே மலடி மலடி என்று மானிடர்கள் ஏசுகிறார் மலட்டுக் குலமதையே-நீ மறப்பிக்க வந்தவனோ! மலடி புழுங்கலை-ரெண்டு மான் வந்து திங்குதின்னு மாதாளங்கம்பு வெட்டி-நீ மான் விரட்ட வந்தவனோ கொல்லையிலே தென்னை வச்சு குறுத்தோல கொட்டாஞ் செஞ்சு சீனி போட்டுத் திங்க செல்வமே பிறந்தவனோ! வில்வப் பொடி மணக்கும் விரிச்ச தலைப் பூமணக்கும் கதம்பப் பொடி மணக்கும் கட்டழகன் கூந்தலிலே. வட்டார வழக்கு: மணக்குதில்ல - மணக்கிறதலலவா? அழிச்சாரே-அழித்தாரே; வந்தடைஞ்ச-வந்தடைந்தவை A 519- 7