உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழர் பண்பாடும் தத்துவமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கைச் சமவெளியில் ஸ்கந்த உருவம் கொண்ட அசல் வாராய்ச்சிச் சான்றுகள் பல கிடைத்துள்ளன. உஜ்ஜயினி யில் கி. மு. 200, 300 க்கு முந்திய ஸ்கந்த உருவம் அடிக்கப் பட்ட காசுகள் கிடைத்துள்ளன. பிரம்மணிய ஸ்கந்த என்ற எழுத்துக்களோடு சேவல் கொடியும், மயில் உருவமும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. இது குஷான அரச வம்சத்தைச் சார்ந்த ஹஅவிஷ்கன் காலத்து நாணயங் களாகும். வேருெரு நாணயத்தில் ஸ்கந்தன் விசாகன் ஆகிய இரு உருவங்கள் ஒருவரையொருவர் நேரில் பார்ப்பது போல திற்கும் நிலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்காசு விடுத் தவரும் குஷான வம்சத்தினரே. யெளதேய கணத்தவர் களும் (புத்தத்தையே தொழிலாகக் கொண்ட இனக்குழு இக்கள்) 6 தலைகளும் 2 கைகளும் உடைய கார்த்திகேய னுடைய உருவம் பொறித்த காசுகளை விடுத்திருக்கின்றனர். இது கி. பி. முதல் நூற்ருண்டில் முதன் முதலாக நடந் திருக்கலாம். தமிழ் நாட்டிலும் முருக வணக்கம் பழமையானதே. மிகவும் பழமையான தமிழ் நூல்களான அகம், புறம், குறுந் தொசை, நற்றிணை முதலிய நூல்களில் காணப்படும் முருகனது சித்திரத்திற்கும், பிற்காலச் சங்க நூல்களான பரிபாடல், முருகாற்றுப்படை போன்ற நூல்களில் காணப் படும் சித்திரத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. பிற்கால நூல்கள் வடமொழிப் பாரதத்திலும், இராமாயணத்திலும் காணப்படும் முருகச் சித்திரத்தோடு ஒன்றுபடுகின்றன. அதற்கு முன்னர் வேலன், முருகன் வணக்கங்கள் இருந்தன. புராண பூர்வமாக முருகன் தோற்ற வரலாறுகள் முற்சான்று கனில் கூறப்படவில்லை. தமிழ்நாட்டில் வரலாற்று முற்காலமான ஆதிச்சநல்லூர் தாழி அடக்க காலத்திலேயே இந்த வணக்கமுறை இருந்தது என்பதற்கு அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் உள்ளன. இங்கே கிடைத்த தங்கவாய் மூடிகளும், இரும்புக் கொழுவும் பாலஸ்தீனத்தில் கிடைத்த கல்லறைச் சாமான்களை ஒத்திருக்