பக்கம்:தமிழர் மதம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஅ தமிழர் மதம் வாறே குளிக்குங்கால், தான் பெற்ற இவை மறந்து தன் தலை மேல் தானே கை வைத்து இறந்தான். காசியப முனிவன் தட்சப் பிரசாபதியின் புதல்வியர் பதின் மூவரை மணந்தனன். அம் மனைவியருள், அதிதியிடம் ஆதித் தரும், திதியிடம் தைத்தியரும், தனுவிடம் தானவரும், அனாயு விடம் சித்தரும், 'பிரதையிடம் காந்தருவரும், முனியிடம் தேவ மகளிரும், சுரசையிடம் இயக்கரும் அரக்கரும், இளையிடம் மரஞ் செடி கொடி புற் பூண்டுகளும், குரோத வசை யிடம் அரிமா புலி முதலிய விலங்குகளும், தாமரை யிடம் குதிரை கழுதை பறவை முதலியனவும், சுரபி யிடம் ஆ நிரைகளும், வினதை யிடம் அரு ணனும் கலுழனும், கத்துரு விடம் நாகரும், பிறந்தனர். இவை போலிகைக் கதைகள். அகத்தியன் கும்பத்திற் பிறந்தான் என்பது போன்ற இடக்கர்க் கதைகள் இங்கு விடப் பட்டுள்ளன. (கக.) கொண் முடிபு (சித்தாந்தம்) துறவினாலேயே வீடுபே றென்றும், துறவு பிராமணனுக்கே யுரிய தென்றும்,பிராமணன் வாழ்க்கை மாணவம் (பிரமசரியம்), மனை வாழ்வு(கிருகத்தம்), காடுறைவு(வானப் பிரத்தம்), துறவு (சன்னியாசம்) என நானிலைப் பட்ட தென்றும், ஆரியப் பார்ப் பான் (பிராமணன்), அரச மறவன் (சத்திரியன்), வேளாண் வணிகன் (வைசியன்), கீழ் மகன் (சூத்திரன்) என்னும் நால் வரணங்களும் இறைவன் படைப் பென்றும், ஒவ்வொரு வரணத் தாரும் தத் தம் குலத் தொழிலைச் செய்வதே ஒழுக்கம் (தருமம்) என்றும், சூத்திரன் தன் குல வொழுக்கத்தில் நின்று பிராமண னுக்குத் தொண்டு செய்வதனால் மறு பிறப்பில் வைசியனாகி, பின்னர் இவ்வாறே படிமுறையாகப் பிறப் புயர்ந்து இறுதியிற் பிராமணனாவானென்றும், அவ் வவ் வரணத்திற் கேற்பவே முக் குணங்களும் முந் நாடிகள் போல் மிக் குங் குறைந்தும் நிற்கு மென்றும், ஆரியர் தம் மேம்பாட்டிற் கேதுவாகத் தம் மனம் போற் கொண் முடிபு வகுத்துக் கொண்டனர். சிவனியக் கொண் முடிபில், வீடு பேற்று வாயில்கள் கோவில் தொண்டு (சரியை), வழிபாடு (கிரியை), ஓகம் (யோகம்), அறிவை (ஞானம்) என நான்காகக் கூறப்பட்டது. மாலியத்தில், கருமம் (கன்மம்), ஓதி (ஞானம்), புகலடைவு (பத்தி, பிரபத்தி}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/104&oldid=1428982" இலிருந்து மீள்விக்கப்பட்டது