பக்கம்:தமிழர் மதம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அ தமிழர் மதம் 'நம' என்னும் வட சொல் உடல் வண்க்கத்தை மட்டும் குறிக்கும். போற்றி' என்னும் தெய்வத் தமிழ்ச் சொல்லோ, வழுத்து தலோடு கூடிய வணக்கத்தையே குறிக்கும். (சிவாய நம' என்பதிலுள்ள உயிர் நாடிச் சொல், சிவ என் னும் தீந்தமிழ்ச் சொல்லே. ஆதலாற் சிவ 'போற்றி என்பதே அறிவுடைத் தமிழர்க்கு உரியதாம். சிவ சிவ என் சேதி வணங்கி னும் போதும். சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என் றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே (திருமந். உசுசுஎ). எந்த எழுத்திற்கும் குறிப்புப் பொருளாக எதையும் குறிக்க லாம். ஒவ் வொரு மதத்தாரும் ஒவ்வோர் எழுத்திற்கு ஒவ் வொரு பொருள் குறிப்பர், கடவுள் வணக்கமும் முழு நம்பிக்கையும் கலந்தா லன்றி எந்த எழுத்தும் சொல்லும் பயன் படா. இராயிரம் ஆண்டாக வழங்கி வந்ததனால் மட்டும், எந்தத் தொடர்ச் சொல்லும் உண்மையான மந்திரம் ஆகி விடாது. தமி முறியாத ஆரியர்க்கே சிவாய நம' என்பது உரிய தாம். தமிழர்க்கு உரியது சிவ போற்றி என்பதே. இது ஆரிய ஐந் தெழுத்தினும் வலிமையுள்ள தென்பதைத் தொடர்ந் தோதிக் காண்க. "சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி "சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி "தென்னாடுடைய சிவனே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி! (சித்தனைக் கரிய சிவமே போற்றி', என்று மாணிக்கவாசகரே தம் போற்றித் திரு வகவ லில் வழுத்தி யிருத்தல் காண்க.) சிவனே என்பது சேய்மை விளி வடிவும், 'சிவ' என்பது அண்மை விளி வடிவும், ஆன ஒரே சொல்லே. சிவனை முன் னிலைப் படுத்தியோ உண்ணிலைப் படுத்தியோ விளிக்கும் போது,.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/114&oldid=1429694" இலிருந்து மீள்விக்கப்பட்டது