பக்கம்:தமிழர் மதம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஅ தமிழர் மதம் இறைவனும் ஆதனும் ஒன்றென்று சொல்லிக் கொண்டே, நால்வேறு மக்கள் வகுப்பும் பிராமண வுயர்வும் பிறப்பிலமைத் தலையென்று கூறுவது,எத்துணைத் தன்முரணும் நெஞ்சழுத்தமு மான கூற்றம்! | (கஎ) மதப் பிரிவுகள் சிவனியம், மாலியம் என இரண்டாகவே இருந்த மதங்கள், குமரனியம் (கௌமாரம்), ஆனை முகவம் (காணபத்தியம்), கதிரவம் (சௌரம்), காளியம் (சாக்தம்) என்னும் நான் கொடு ஆருயின. சிவனியத்திற் குள்ளேயே, அகச் சமயம் ஆறென்றும் அகப் புறச் சமயம் ஆறென்றும் பன்னிரு பிரிவுகள் தோன்றின. அபிதான சிந்தாமணியார் பார்த்த சைவம், அனாதிசைவம் முதலிய பதினேழ் சிவனியப் பிரிவுகளைக் கூறியுள்ளனர். பாசண்டம் என்னும் சிலப்பதிகாரச் சொற்கு (5: கரு), தொண்ணூற் றறுவகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை என்று பொருளுரைத்துள்ளார் அடியார்க்கு நல்லார். (தொண்ஜத் மறுவகைக் கோவையும் வல்லவன் (வளையாபதி). "பாசண்டத் துறையும் இவற்றுட் பலவாம் பேசிற் றொண்ணூற் றறுவகைப் படுமே.” (திவா. கஉ-ஆவது). மதப் பிரிவுகள் பல்கினமையால், தமிழில் வடசொற் கலப் பும், தமிழர்க்குள் பிரிவினையும், மேன் மேலும் மிக்கன. (கஅ) கடவுட் சமய மறைப்பு உருவ வழிபாட்டினாலேயே 'ஆரியர்க்குப் பிழைப்பும், தமி மரை முன்னேற வொட்டாது என்றும் அடிமைத் தனத்துள் அமிழ்த்தும் வாய்ப்பும், உண்மையால், கடவுட் சமயம் மறைக் கப் பட்ட து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/124&oldid=1429704" இலிருந்து மீள்விக்கப்பட்டது