பக்கம்:தமிழர் மதம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம். எல்லாச் சிவன் கோவில்களிலும் வழிபட்டான். இறுதியில் திரு விடை மருதூரில் அப்பழி நீங்கிற்று. ஆயினும், அரசன் கோவிலி னின்று வெளியே வந்த போது, அங்கும் அவ்வாவி காத்துக் கொண்டிருந்ததைக் கண்டு இறைவனிடம் முறை யிட்டான் , இறைவன் திருவுண்ணாழிகைச் சுவர்ப் பக்கத்திலுள்ள ஒரு துளை வழியாக அவனைப் பின் பக்கம் போக்கி, மேலைக் கோபுர வாசல் வழித் தப்புவித்தான். அதன் பின்னும், அரசன் அஞ்சித் தன் குதிரை மேலேறி ஒரு கல் தொலைவு விரைந்தோடித் திரும்பிப் பார்த்த போது, பிராமணக் கொலைப் பழிப் பேய் தொடராது நின்று விட்டது கண்டான். அவ் விடமாகிய திரிபுவனத்தில், தன் நடுக்கத் தீர்த்த சிவனுக்கு ஒரு சிறந்த கோவில் கட்டினான் , இக் கதையை மெய்ப்பிக்கும் பொருட்டாக, திருவிடை மரு தூர்க் கோவில் திருவுண்ணாழிகைச் சுவ ரருகில் ஒரு துளையும், கீழை வாயிற் பக்கத்தில் பிராமணப் பேயுருவும், கோவிற் கல் வெட்டுக்கள் சிலவும், இன்றும் உள்ளன. எல்லாம் வல்ல இறைவனே பிராமணப் பேய்க்கு அஞ்சிய போது, மாபெரு வேந்தராயினும் மக்கள் அஞ்சாதிருக்க முடியுமா? நடுக்கத் தீர்த்தான் என்று பெயர் பெற்றிருக்க வேண்டிய சிவன், கம்பஹரேசுவரர் எனப் பெயர் பெற்றது, இசுவர சிவா என்னும் பிராமணக் குரவனின் வடமொழி வெறியாகும். கோவிற் களவு தெய்வ வுடமையாகிய திருக் கோவிற் பொருட்களைத் திருடி விற்பதும் பயன் படுத்துவதும், கையாடுவதும் தீராத் தீவினை யாகக் கருதப்படும். திருப்பனந்தாட் கோவிலில் வெள்ளித் தட்டைத் திருடிய பூசகனுக்கு, ஓரிரு நாள் வேலை நிறுத்தமே தண்டனையாக இடப் பட்டது. தஞ்சாவூரையாண்ட விசயராகவ நாயக்கர் (கி. பி. கசு-கசுகை), தம் குடிகளின் சேமத்தைக் கருதி, நாள் தோறும் தாம் உண்ணு முன் பன்னீராயிரம் பிராமணருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/130&oldid=1429710" இலிருந்து மீள்விக்கப்பட்டது