பக்கம்:தமிழர் மதம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழர் மதம் "தேங்குபுக ழாங்கூர்ச் சிவனேயல் யாளியப்பா நாங்கள் பசித்திருக்கை நாயமோ-போங்காணும் கூறுசங்கு டோன் முரசு கொட்டோசை யல்லாமற் சோறுகண்ட மூளியார் சொல். 13 என்னும் இரட்டையர் பாடல் தெரிவிக்கின்றது. சங்கர நயினார் கோவிற் சிவமால் (சங்கர நாராயணன்) செப்புப் படிமையை, செண்பகக் கண் தம்பி யென்னும் பூசகன் திருடிக் கொண்டு போய்த் திருவுத்தர கோச மங்கையில் விற்று விட்டான். அவனுக்குத் தண்டனையே யில்லை. (a) தமிழ்க் கேடு சின்னமனூர்ச் சிவபிரான் கோயில் பெருந் திருவிழாவில் (1902), திரு வுருவம் மறுகிற்கு (வீதிக்கு) எழுத் தருளி ஆரியப் பார்ப்பனச் சேரியில் வரும் போது, சிவ தீக்கை பெற்ற வேளாள ஓதுவார் தேவார திருவாசகங்களைப் பண்ணிசையோடு ஓதி வந்ததை, சூத்திரப் பாடல்கள் தங்கள் காதில் விழக் கூடா தென்று அங்குள்ள பிராமணர் தடுத்ததொடு, ஊர்காவல் கண் காணிப்பாளராகவும் வழக்குத் தீர்ப்பாளராயு மிருந்த பிராமண சின் பாதுகாப்பையும் தேடிக் கொண்டனர். தமிழ் வழிபாட்டு விலக்கு, முதலிரு கழக இலக்கிய முற் நழிவு, நூற்றுக் கணக்கான இடைக்கால நூல் இறந்துபாடு, அறிவியல் இலக்கிய வளர்ச்சியின்மை, தேவார மறைப்பு,தென் சொல் வளர்ச்சி யின்மை, வடசொற் கலப்பு, தென்சொல் விழிபு, தென்சொல் வழக்கழிவும் இறந்துபாடும், செந்தமிழ் கொடுந்தமிழ் மொழிகளின் உறவு முறிவு முதலியன தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாம். | (ச) தமிழினக் கேடு தமிழன் தாழ்வு, பிறவிக்குலப் பிரிவினையும் ஒற்றுமைக் கேடும் தன்னினப் பகையும், தொழி லிழப்பும் பிழைப் பிழப்பும், எளியார்க்கு அறப் பேறின்மை , தமிழ்ப் பண்பாட் டழிவு, அகக் கரண வலி யிழப்பு, தீண்டாமையும் கோவிற் புகவின் மையும், பிராமணர்க் கச்சம், ஆரியப் பழக்க வழக்க மேற் கொள்வு, வர லாற்று மாற்றம் முதலியன தமிழினத்திற்கு நேர்ந்த தீங்குகளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/132&oldid=1429663" இலிருந்து மீள்விக்கப்பட்டது