பக்கம்:தமிழர் மதம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிகழ் நிலை யியல் வைதிக முறைப்படி உபநயனமும் சிவாக முறைப்படி சமயம், விசேடம், நிர்வாணம் என்னும் தீட்சைகளும் பெற்று, ஆச்சாரி யாபிடேகம் செய்து கொண்டு சைவக் குருமார்களாய் விளங்குபவர்கள், ஆதி சைவர் எனப்படும் சிவமறையோர், சிவாசாரியார்' என்று சொல்லப்படும் இவர்கள், சிவபெரு மானைச் சிவாகமங்களின் வழித் தம் இல்லங்களில் ஆன்மார்த்த மாகவும், சிவாலயங்களில் பரார்த்த மாகவும் பூசை செய்பவர்கள், சிவாலயங்களில் நித்திய தைமித்திகங்களாகிய பூசைகளையும் விழாக்களையும் நடத்துபவர்கள், (பக், கக), வேதம்பசு அதன்பால் மெய்யாக மம் நால்வர் ஓதும் தமிழ் அதனின் உள்ளுறுநெய்-போ தமிகும் நெய்யின் உறுசுவையாம் நீள் வெண்ணெய் மெய்கண்டான் செய்த தமிழ் நூலின் திறம்.) (பக். ), fஉலகம் சொல் வடிவும் பொருள் வடிவும் என இருவகை யாய் உள்ளது. சொல் உலகம் 'சத்தப் பிரபஞ்சம்' எனவும், பொருள் உலகம் அர்த்தப் பிரபஞ்சம்' எனவும் சொல்லப்படும். அவற்றுள் சொல் உலகம், எழுத்துக்களை உறுப்பாகக் கொண்ட சொற்களும் சொற்றொடர்களுமாம். எழுத்துக்கள் வன்னம்' (வர்ணம்) என்றும், சொற்கள் 'பதம்' என்றும், வடமொழியிற் சொல்லப்படும். சொற்றொடர்களில் சிறப்புடையன மந்திரங்கள். அதனால், மந்திரம், பதம், வன்னம்' எனச் சத் தப் பிரபஞ்சம் மூவகையாகச் சொல்லப்படும். வடமொழி மரபும் சைவ மரபும் பற்றி, வன்னம் ஐம்பத் தொன்று, பதம் எண்பத் தொன்று, மந்திரம் பதினொன்று' எனச் சிவாகமங்கள் வரை யறை செய்கின்றன. இங்குக் கூறப்பட்ட எழுத்து சொல் சொற் றொடர்களில், எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்துக்களும் சொற்களும் நூல்களும் அடங்கும் என்பது சிவாகமங்களின் கொள்கை.. ' (சத்தப் பிரபஞ்சம் அறிவுக்குக் காரணமாய் நிற்றலின், அது சுத்த மாயையின் காரியமே யாகும். ஆகவே, சுத்த மாயை யின் காரியமே, சொற் பிரபஞ்சம், பொருட் பிரபஞ்சம் என இரு வகை யாகின்றது. அசுத்த மாயையின் காரியங்களும், பிரகிருதி மாயையின் காரியமும், பொருட் பிரபஞ்சம் ஒன்றேயாதல் அறிந்து கொள்க.' (பக். கஅ).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/147&oldid=1429647" இலிருந்து மீள்விக்கப்பட்டது