பக்கம்:தமிழர் மதம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வரு நிலை யியல் கசடு பெரும்பாலும் அடிமையராயும் பேடியராயும் இருத்தலால், இளந் தலை முறையைச் சேர்ந்த மாணவரே பெருங் கிளர்ச்சி செய்து இம் மாற்றத்தைச் செய்தல் வேண்டும். இந்து என்னுஞ் சொல் ஆரிய அடிமைத் தனத்தைக் குறித்தலால், உரிமைத் தமிழர் அச் சொல்லால் தம்மைக் குறித்தல் பெரு மானக்கேடான செய லாகும். முதற்கண், செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தென் தலை நக ராகிய திருநெல்வேலியில் உள்ள, 'திரவியம் தாயுமானவர் இந் துக் கல்லூரி'யின் பெயரை, திரவியம் தாயுமானவர் தென்ன வர் கல்லூரி'யென்று நெல்லைத் தமிழ மாணவர் மாற்றி, ஏனைக் கல்வி நிலைய மாணவர்க்கும் நல்வழி காட்டுவாராக. சு, எல்லா மதமும் தனித் தமிழ் போற்றல் கடவுள் புறக் கண்ணாற் காணப் படாமையாலும், மதம் மறு மையை நோக்கிய தாதலாலும், மக்கள் மனப்பான்மை பல்வேறு வகைப்பட்டிருப்பதனாலும், உள் நாட்டு மத மென்றும் வெளி நாட்டு மத மென்றும் வேறுபாடு காட்டாது கருத்து வேறுபாட் டிற்கு இடந் தந்து, தனித் தமிழைப் போற்றுவதையே எல்லா மதத்தாரும் கடைப் பிடித்தல் வேண்டும். எ. தவத்திருக் குன்றக்குடி அடிகள் கடமை சிறந்த தமிழறிஞராயும் துறவியராயும் தமிழப் பண்பாட்டின ராயும் சீர் திருத்த நோக்கினராயும் ஒரு திருமடத் தலைவராயும் உள்ள, தவத்திருக் குன்றக்குடி அடிகள், தமிழ் நாட்டுச் சிவ மடங்களிலேனும், பண்டைக் கடவுட் சமய உருவிலா வழிபாட் டைப் புகுத்த முயல்வார்களாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/161&oldid=1429630" இலிருந்து மீள்விக்கப்பட்டது