பக்கம்:தமிழர் மதம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முடிபுரை யியல் ககள் மேற்பட்ட வரணத்திற் பெண் கொள்ளலா மென்து தெறியீட்டு முறையாய்க் கூறவில்லை. ஆயினும், அவ் வழக்கம் தொன்று தொட்டு இருந்தே வந்தது. இதை மனு நூலுங் கூறுகின்றது. பிராமணனுக்கு க்ஷத்திரிய வைசிய ஸ்திரீகளிடத்திற் பிறந்தவர்கள், எப்படி உபநயத முதலியவற்றிற் குரியவர்களா யிருப்பதால் உயர்ந் திருக்கிறார்களோ, அப்படியே வைசியனுக்கு க்ஷத்திரிய ஸ்திரீ பீடத்திலும் ஷத்திரியனுக்குப் பிராமண ஸ்திரீ யிடத்திலும் பிறந்த புத்திரர்கள் , சூத்திரனுக்கு வைசிய ஷத் திரிய பிராமண ஜாதி ஸ்திரீ யிடத்திற் பிறந்தவர்களைக் காட்டி, லும் உயர்ந்த வர்கள். (மது. (மொழி பெயர்ப்பு ) க0:உ.அ). மூவேந்தரும் பிராமணர்க்கு முழு அடிமையராய்ப் போன தற்கு, பிராமணப் பெண் நுகர்ச்சியும் கரணியமா யிருந்திருக் கலாம். பண்டை முறைப்படி தமிழிலேயே திருக் கோவில் வழிபாடு செய்து வந்த குருக்கள் என்னும் தமிழ வகுப்பார், ஆரிய மந் திரங்களைக் கற்றுக் கொண்டு சமற்கிருதத்தில் வழிபாடு நடத்தி இந் நூற்றாண்டிற் பிராமணராக மாறி விட்டதாகவும் சொல்லப் படுகின்றது. பிராமணர் என்றும் தம் மேம்பாட்டை நிலை நிறுத்தி இன் புற்று வாழ விரும்பியதால், தம் மின வுயர்த்தத்தைப் பேணு வதிற் கண்ணுங் கருத்துமா யிருந்து வந்திருக்கின்றனர். இறையடியா ரென்று சிறப்பித்துச் சொல்லப் படுபவர், செயற் கரிய செயல் செய்த தெய்வப் பற்றாளரே. "வாளான் மகவரித் தூட்டவல் லேனல்லன் மாதுசொன்ன சூனா லிளமை துறக்கவல் லேனல்லன் தொண்டுசெய்து நாளாறிற் கண்ணிடத் தப்பவல் லேனல்லன் நானினிச்சென் மூளாவ தெப்படி யோ திருக் காளத்தி யப்பனுக்கே. (திருத்தில்லை, ) என்று பட்டினத்தார் மனம் வருந்திப் பாடியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/183&oldid=1429425" இலிருந்து மீள்விக்கப்பட்டது