பக்கம்:தமிழர் மதம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரை யியல் கஅ௩ முத்தீக்கை: சமயம்-சமயம். விசேஷம் - சிறப்பு. நிர்வாணம் - அவிப்பு. கிரியாவதிவினைமுறை. ஞானவதி - நினைமுறை. நிரா தாரம்-நேரடி, சாதாரம்-வாயில் வழி. ஆசாரி யாபிஷேகம்-ஆசிரியத் திருநீராட்டு. குரு லிங்க சங்கமம்-குரு விலங்கத் திருக்கூட்டம். இலக்கு - இலக்கம் - இலங்கம் - கு அத்துவா - அதர்வு அல்லது அதர்வம். அத்துவா சோதனை - அதர்நிலை நோட்டம். குரு = பருமன், பெருமை, கனம். குரு-குரவன் -பெரி யோன், கனம் (கண்ணியம்)உள்ளோன், சச்சிதானந்தம் - மெய்யறி வின்பம். நமப் பார்வதி பதயே!- மலைமகள் மணாள போற்றி! ஹரஹர மஹா தேவ!--அரவர மாதேவ! அரம் - சிவப்பு. அரம்- அரன் - சிவன்." இதை ஹர என்று திரித்து அழிப்பவன் என்று பொருள் கூறுவது ஆரிய வழக்கு. ET. மக்கள் முன்னேற்றத்திற்கு மதம் மூட்டுக் கட்டையா? மத வெறியும் அதனா லேற்படும் போருமே, மக்கள் மகிழ்ச்சி யாய் வாழ்வதற்கும் அமைதியாய் முன்னேறுவதற்கும் தடை யாய் நிற்கின்றன. மதம் தன்னளவில் மக்கன் முன்னேற்றத் திற்கு முட்டுக் கட்டை யன்று. 'தமிழர் எல்லாத் துறையிலும் தலை சிறந்து சீருஞ் சிறப்புமாக வாழ்ந்தது, குமரிநாட்டு மத வாழ்க்கைக் காலமே. இன்றும் அறிவியல் கம்மியத் துறை களில் தமை சிறந்து திங்களை யடைந்த அமெரிக்கர், கடவுள் நம்பிக்கை யுள்ளவரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/199&oldid=1429358" இலிருந்து மீள்விக்கப்பட்டது