பக்கம்:தமிழர் மதம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் உத்தல்- பொருந்துதல். உத்தி (உ +தி) = பொருத்தம், நூற்குப் பொருந்தும் முறை, விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரிக்க இருவர் இணைதல். ச உத்தம்-பொருத்தம். உத்தம்-வ. யுக்த. உத்தி-வ.யுக்தி. உ -ஒ. ஒத்தல்- பொருந்துதல், போலுதல். உ-உம். உம்முதல் - பொருந்துதல், கூடுதல். எண்ணும்மை யிடைச்சொல்லானது இதுவே. உம் அம் = பொருந்தும் நீர், நீரொடுநீரும் நிலத்தொடுநீரும். ஆகப் பொருந்துதல் இருவகைத்து. அம் - அமர். அமர்தல்-பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல். அம் - அமை. அமைதல்-பொருந்துதல், அடங்கியிருத்தல், கூடுதல், நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல். அமை - அவை -கூட்டம். அமை-அமையம்- பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க் செவ்வி, வினை நிகழும் சிறுபொழுது. அமை - சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப்படையும் கன்னி போலும் நுகர்ச்சிக் கேற்ற தாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை முடிதல், அணியமாதல். சமையல் - சோறு குழம்பாக்கும் வினை. ‘‘சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும்.3’ (பழமொழி). சமை-சமையம்=பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத்தக்க வேளை. சமையம்- சமயம் -ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப்படுத்தும் முக்கரண வொழுக்கம். பொருளை வேறுபடுத்தற்கு, சொல் விடை மகர ஐகான் அகரமாயிற்றென அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/20&oldid=1428861" இலிருந்து மீள்விக்கப்பட்டது