பக்கம்:தமிழர் மதம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4அசு தமிழர் மதம் - " அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 17 (உருஎ) என்பது திருமந்திர மறை. இங்கனம் உயர்ந்த தேவிக அறத்தை வலியுறுத்தும் மத வியல், பகுத்தறிவிற்கு மாறான தென்று எந்தப் பகுத்தறிவாளன் சொல்ல முடியும்? கத்தரிக்கா மறுக்க வாங்கிய கத்தி கழுத் தறுக்குங் கருவியா யிருப்பின், அது கழுத் தறுத்தான் குற்றமா?கத்தியின் குற்றமா? மாந்தரை யெல்லாம் கடவுளின் மக்களாக்கி உடன் பிறப் பன் பால் ஒன்றுபட் டின்புற்று வாழச் செய்யும் உயர்ந்த மதவியல , ஒரு தன்னலக் கொள்ளைக் கூட்டம் தாம் வாழவும், பிறர் தாழவும் பயன்படுத்தின், அக் குற்றம் எங்கன் மதவியலைச் சாரும்? ' இன்று கடவு ளில்லை யென்று சொல்வாரும் கொள்வாரும், தமக்குச் சமமானவரும் தம்முடன் உண்ணும் தகுதியுடையவரு மான வகுப்பாருடனும் மணவுறவு கலவாது, ஆரியன் வகுத்த வழியிலேயே நின்று, என்றும் தம் பிறவிக் குலத்துள் ளேயே கொள்வனே கொடுப்பனை செய்து கொள்வது, எங்கனம் பகுத் தறிவுச் செயலாகும்? இதனாலும், மதம் மக்கள் முன்னேற்றத் திற்கு முட்டுக்கட்டை யன்றென்பது பெறப்படுகின் ற தன்றோ? f" பழியோரிடம் பளகோரிடம். 3 ஆரியம் என்ற பேரு மில்லாத குமரிநாட்டிலும், கடவுள் நம்பிக்கை யில்லாதவர் சில ரிருந்தனர். பிராமண வகுப்பில்லாத பிறநாடுகளிலும், கடவுள் நம்பிக்கையில்லாத பல ரிருக்கின் றனர். இது பிறவிக் குணங்களுள் ஒன்று. கடவுளும் மறுமையும் இல்லை யென்று கூறும் 2. கியம் லோகாயத) என்னும் மதம், கடைக் கழகக் காலத்தில் தமிழகத்தி லிருந்தமை, " பாங்குறும் உலோகா யதமே பௌத்தம் என்னும் மணிமேகலை யடியால் (உ.எ:எஅ) அறியப்படும். இம் மதவியலை நூலாக விரித் துரைத்தவன் சார்வாகன் {Cirvika).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/202&oldid=1429361" இலிருந்து மீள்விக்கப்பட்டது