பக்கம்:தமிழர் மதம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

க அஅ தமிழர் மதம் வேலை செய்யாத தூக்க வேளையாகிய இராக் காலத்திற்கு, வெப்பமான நெருப் பொளி விளக் காகாது குளிர்ந்த நிழ லொளி விளக் காக விருப்பதும், கவனிக்கத் தக்கது. (s) பிற கோள்களைப் போற் சுற்றது ஒரே இடத்தி லிருக்கும் கதிரவன், பத்துத் திசையும் ஓளி சமமாகப் பரவுமாறு உருண்டையா யிருப்பதும், அளவிடப் படாத நீள் பெருங் காலம் எரிந்து வரினும் அதன் எரியாவி குன்றி யனையா திருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாத லால், அதை யியக்கி யாளும் ஒரு பரம் பொருள் இருத்தல் வேண்டும். (ச) கோள்கள் ஒன் ேடொன்று முட்டாது தன் தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால் அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன் றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந் திருப்பதும், இயற்கைக்கு அப்பாற் பட்ட'ஓர் ஆற்றலின் அமைப்பே, (டு) காலமும் இடமும் தொடக்கமும் இறும் இல்லாதவை யா தலால், இற்றை மக்களுலகந் தோன்று முன், எண் ணிக்கை யற்ற உயிருலகங்கள் தோன்றி யழிந் திருத்தல் வேண்டும். இதைத் தான், படைத்து விளையாடும் பண்பி னோனும் துடைத்துத் துயர் தீர் தோற்றத் தோனும் தன்னில் வேறு தானொன் றிலோனும் அன்னோன் இறைவ னாகும்என் றுரைத்தனன் மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவ வாதி). (சு) மாந்தன் தோன்றி ஐம்பதி சாயிரம் ஆண்டாயிற் றென வைத்துக் கொள்ளினும், நூற்றுக் கணக்கான தலை முறை கள் கழிந் திருத்தல் வேண்டும் , பத்துக் கணக்காகத் தொடங்கிய மக்கட் டொகை இன்று நூறு கோடிக் கணக் காகப் பெருகி யுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/204&oldid=1429363" இலிருந்து மீள்விக்கப்பட்டது