பக்கம்:தமிழர் மதம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ககா தமிழர் மதம் விருக்கலாம். பல் பிறவி நம்பிக்கையாளர் நல்லோர் துன்பத்தைப் பழவினைப் பயன்' என்பர். மாத்தன் மதியாற்றல் மட்டிட்ட தாதலின், இறைவன் ஆட்சியி லுள்ள எல்லாவற்றையும் அறிய முடியாது. ஆழ வமுக்கி முகக்கினும் ஆழ்கடலில் நாழி முகவாது நாணாழி. (மூதுரை, கக). நல்லோர்க்கு நேரும் தீங்குகட்கு, அவர் பழம்பிறப்பிற் செய்த தீவினை களைக் கரணியமாகக் காட்டுவர் கொண் முடிபாளர். எங்கன மிருப்பினும், இரு சாராரும் தத் தம் கொள்கையை எதிர்க் கொள்கையார் நம்புமாறு நாட்ட முடியா திருப்பதால், கருத்து வேறுபாட்டிற் கிடந் தந்து, ஒரு சாராரை யொரு சாரார் பழிக்காதும் பகைக்காது மிருப்பதே உண்மையான பகுத்தறிவாம். மேலும், கடவுள் உண்மையாக இல்லை யெனின், நம்பாத வனுக்குக் கேடில்லை. ஒருகால், உள்ளா ரெனின் அவனுக்குக் கேடுண்டாம். ஆதலால், நம்பா மதத்தினரும் நம்பு மதத்தைக் கடைப் பிடிப்பதே சாலச் சிறந்ததாம். கூ. மதத்தை அழிக்க முடியுமா? கடவுள் தம்பிக்கை யில்லாத தற்பெருமை வேந்தரும், நெறி தப்பிய அறிவிய லாராய்ச்சியாளரும், பொதுவுடைமைக் கொள் கையினரும், கடவுட் கொள்கையை ஒழிக்கத் தம்மால் இயன்ற வரை முயன்று வந்திருக்கின்றனர். மத வியல் முற்றும் மனத் தைப் பொறுத்த தாதலின், அதை எவரும் அழிக்க வியலாது. சாக்கிய நாயனார் புகைவர் போன்று சிவப் படிமையைக் கல்லா வடித்தே, சிவனடியா ராயினார் எனின், வேறு என்ன சொல்ல 'விருக்கின்றது! | மேலும், பொதுவுடைமை இறைவனுக் கேற்றதே. மக்க ளெல்லார்க்கும் உன் வெனின், தந்தை மகிழத்தானே செய் வான்! அங்கனமே பரமத் தந்தையும். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான்' (குறள் . க0சுடீ) என் மூர் திருவள்ளுவர். கிறித்தவர் எதிர் நோக்கும் ஆயிர வாண்டு அரசாட்சியும் பொதுவுடைமை வகையில் தான் இயலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/206&oldid=1429365" இலிருந்து மீள்விக்கப்பட்டது