பக்கம்:தமிழர் மதம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பின்னிணைப்பு (1) 'பூசகர் பதவியிலும் கையடைஞர் (Trustees) பதவியிலும் தொடர்மரபு (Hereditariness) நீக்கப் படல். (ச) அறிஞரும் ஆராய்ச்சியாளரும் அறிக்கையாளரும் உயர் பதவியாரும் பெருமக்களும் அரசரும், திருவுண்ணாழிகையல் லாத கோவி லகத்துட் புகவுச் சீட்டுப் பெற்றுப் புகவிடல். (0 ) பெருங் கோவில்களின் வருமானத்தி லொரு பகுதியைப் - பொது நலப் பணிக்குச் செலவிடல். (சு) அற நிலையப் பாதுகாப்புத் துறை யமைச்சர் கடவுள் நம்பிக்கை யுடையவரா யிருத்தல். (எ) உருவிலா வழிபாட்டைப் படிப் படியாகப் பொதுமக்க ளிடைப் புகுத்தல். கடவுள் எல்லார்க்கும் பொதுவான அன்பார்ந்த தந்தை யா தலாலும், கணக்கற்ற உலகங்களை யுடைமையாலும், அவ ருக்கு ஒரு தேவையு மின்மையாலும், அருமை மக்கள் போன்ற அனைத்துயிரும் இன்பமாக வாழ்வதே அவர் விருப்பா தலாலும், வாழ்க்கையி னின்று மதத்தை வேறாகப் பிரிப்பதும், தாழ்த்தப் பட்ட வகுப்பினர் கடவுள் இருக்கையான கோவிலுக்குட் புகு வதைத் தடுப்பதும், கோவிற் சொத்து கோவிற் பணிக்கே செல விடப்பட வேண்டு மென்பதும், கடவு ளியல்பை அறியாதவரும் அவருக்கு மாறான வருமான தன்னல வகுப்பாரின் செயலா தலின் அதைப் பொருட் படுத்தாது பொது நலப் பணியில் இடுபடல் வேண்டும். கோவிற் சொத்தைப் பிராமணர்க்கே செலவழிப்பின் திருப்பணியும், எல்லார்க்கும் பயன் படுத்தின் தெருப்பணியும், ஆகும் போலும்! உ. மதச் சம நோக்கு சிவனியம், மாலியம், உலகியம் ( லோகாயதம் அல்லது சார்வாகம்) என்னும் மூன்றே தொன்று தொட்டு வழங்கும் தமிழ மதங்க னாயினும், இன்று வெளிநாட்டு மதங்களும் தமிழரிடைப் புகுத் திருப்பதாலும், அம் மதத்தாரைத் தமிழ ரல்லர் என விலக் கல் கூடாமையாலும், இற்றை முறைப்படி, சமணம், புத்தம், கிறித்தவம், இசலாம் என்னும் மதங்களையும் தமிழ் நாட்டு மதங்களாகவே கூறல் வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/211&oldid=1429370" இலிருந்து மீள்விக்கப்பட்டது