பக்கம்:தமிழர் மதம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

'க. மாந்த ரியற்கை வேறுபாட்டு விளக்கம் - மாந்த ரெல்லாரும் ஒரே திணை யாயினும், நாகரிக வாழ்க்கை * யில் உணவு மட்டுமன்றி, உடை, உறையுள், கருவி, தட்டு முட்டு, ஊர்தி, மருந்து, இன்புறுத்தி, அறிவு நூல் மு.'தலிய பல்வேறு பொருள்கள் தேவையா யிருப்பதால், அவற்றை யெல் லாம் உருவாக்குவதற்கு, அவர் அகக் கரணங்களும் புறக் கரணங்களும் இயற்கையிலேயே வெவ் வேறு வகைப்புட் டுள்ள ன . | ஒவ்வொரு பொருளும் உழைப்பினாலேயே உருவாக்கப்படும். உடலுழைப்பும் மதியுழைப்பும் என உழைப்பு இருவகை. இரு வகை யுழைப்பும் இன்றியமையாதனவே. உடலுழைப்பாளிகள் உடல் வலிமையராகவும் மதியுழைப் பாளிகள் மதி வலிமையராக வும் பிறக்கின்றனர். இது இறைவன் ஏற்பாடு. இதையே ஊழ் (விதி) என்பர். எல்லாரும் மதி வலியராயின் உடலுழைப்பு நடைபெருது. இதை, எல்லாரும் பல்லக் கேறினால் எவர் தூக்குவது? என்னும் பழமொழி உணர்த்தும். ஆயின், உடலுழைப்பாளி யரைத் தாழ்வாகக் கருதுவதும், அவர்க்கு வேண்டிய வாழ்க் கைத் தேவைகளைத் தர மறுப்பதும், கொடுமையும் அஃறிணைத் தன்மையும் ஆகும். உடலுழைப் பாளியரையும் உடன் பிறப்புப் போற் கருதி மதிக்க வேண்டு மென்பதையே, "யாதும் ஊரே யாவரும் கேளிர் நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்தல் அதனினு மிலமே. - (புறநா. கடை) என்று பாடி அறிவுறுத்தினார் கணியன் பூங்குன்றனார். : உடலுழைப் பாளியர் தம் உரிமையைப் பெறும் பொருட்டே, காரல் மார்க் கசுவும் பிரெடிரிக்கு எஞ்சல்சுவும் சென்ற நூற்றாண் டில் தோற்றுவிக்கப் பட்டனர். . இனி, அகக் கரணமும் புறக் கரணமும், மீண்டும் வெவ்வேறு தொழிற் பிரிவிற் கேற்றவாறு, பல்வகை நுட்ப வேறுபாடுடை யன வாய்ப் பிறப்பில் அமைகின்றன. இதன் விளக்கத்தை பெல்லாம், என் மண்ணில் விண் என்னும் நூலிற் கண்டுதெளிக, ' இண்டு விரிப்பிற் பெருகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/213&oldid=1429372" இலிருந்து மீள்விக்கப்பட்டது