பக்கம்:தமிழர் மதம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் Cum என்னும் இலத்தீன அடிச் சொல்லும், முன்னொட் டாகும்போது com என்று திரிந்து, வருஞ்சொன் முதலெழுத்திற் கேற்ப con, col, cor என்று இறுமாறும். சில எழுத்துக்கட்கு முன் 00 என்று இறு கெடவுஞ் செய்யும். இங்ஙனமே ஆங்கிலத்திலும். Jir இங்ஙனம் இலத்தீனத்தில் கும்-கொம் என்றும், ஆங்கிலத் திற் கம் என்றும் திரியும் முன்னொட்டு, கிரேக்கத்தில் ஸும் (sum} என்றும் ஸிம் (sym) என்றும், சமற்கிருதத்தில் ஸம் (6am) என் றும், திரியும். கிரேக்க முன்னொட்டும், இலத்தீன முன்னொட்டுப் போற் பின்வரும் எழுத்திற்கேற்ப, சின் (sya), சில் (syl) என் றும், திரியும். சமற்கிருத முன்னொட்டு இறுகெட்டு ஸ (8a) என் றும் நிற்கும். இவற்றிற் கெல்லாம், கூட (உடன்) என்பதே பொருள். கூட என்பதற்கு நேரான கும்ம என்னும் தென்சொல்லே, முன்னொட்டாகிக் கும் என்று குறுகியும், கும்-கொம்-கம்,கும்- ஸும், ஸும்-ஸம் என்று திரிந்தும், ஆரிய மொழிகளில் வழங் கும் என அறிக. அதன் முதன்மெய், ஐரோப்பாவின் வடமேற் குப்பகுதியிலும் மேற்குப்பகுதியிலும் இயல்பாகவும், அதன் தென் கிழக்குப்பகுதியிலும் இந்தியாவிலும் ஸகரமாகத் திரிந்தும், வழங்குவதை ஊன்றி நோக்கி வரலாற்றுண்மை தெளிக. இனி, இந்திய ஆரியத்தில் (வேதமொழியிலும் சமற்கிருதத் திலும்) செல்லுதலைக் குறிக்கும் 'இ' என்னும் வேரும் 'அய்' என்னும் அடியுமாகிய வினைச்சொற்களும், உய் என்னும் தென் சொல்லினின்று திரிந்தவையே. ஊ அல்லது உ, இதழ்குவிந்தொலித்து முன்னிடத்தை அல் லது முன்னிற்பதைச் சுட்டும் முன்மைச் சுட்டு, ஊஊன்-நீ (முன்னிலை யொருமைப் பெயர்). ஊ-உ--உத்து. உந்துதல் = முன் தள்ளுதல். உ-உய். உய்தல்-முன் செல்லுதல், செல்லுதல். உய்த்தல் - முன்செலுத்துதல், செலுத்துதல். உய்-இய்-இயவு = க. செலவு. "இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கில்' (சிலப். கக: க௯௮). உ. வழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/22&oldid=1428864" இலிருந்து மீள்விக்கப்பட்டது