பக்கம்:தமிழர் மதம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் யில் "இன்னிசை யெழிலி" யென்றது முகில் அல்லது மழைத் தெய்வத்தை. இரண்டாம் தாழிசையில் ‘‘கனை கதிர்க் கனலிச்ச என்றதே ஞாயிற்றை. நச்சினார்க்கினியர் மூவிடத்தும் ஞாயி றென்றே பொருள் கொண்டு, ஞாயிற்றைப் பாலைக்குத் தெய்வ மாகக் கூறினார். பாலைத் தெய்வம் காளியே. கதிரவனும் திங்க ளும் நானிலத்திற்கும் ஐந்திணைக்கும் பொதுவாகும். தொல்காப்பி யர், மாயோன் மேய' (தொல். கூருக) என்னும் நூற்பாவில், பாலைக்குத் தெய்வங் கூறாது விட்டதால், இம் மயக்கம் நேர்ந்தது. இருசுடர் கதிரவன் பகலைத் தோற்றுவித்துப் பல்வேறு தொழிலும் உலக வாழ்க்கையும் நடைபெறச் செய்யும் கதிரவனை வணங்கியது, இயற்கைக்கு முற்றும் ஒத்ததே. இன்றும், நீண்ட நாள் இடைவிடாது அடைமழை பெய் யும் போதும், கடும்பனிக் காலத்திலும், கள்வரச்சமும் கடுவிலங் கச்சமும் உள்ள இடத்தில் இராத்தங்கும் போதும், விழா நாட் கனிலும், வேலை நெருக்கடி யுள்ள போதும், நோய் நிலையிலும், தூக்கம் வராத போதும், கண்ணன்ன கேளிரைக் காண விரை யும் நிலையிலும், இரவிற் சவ முள்ள வீட்டிலும், கதிரவன் தோற்றத்தின்மீது வேணவாக் கொள்வது இயல்பா தலால், நாகரிகம் குன்றிய பண்டைக் காலத்தில் அது மிக்கே யிருந் திருத்தல் வேண்டும். "கனை கதிர்க் கனலியைக் காமுற லியைவதோ" என்னுங் கலித்தொகையடி (கசு), கதிரவன் வணங்கப் பட்டதைக் குறிப்பாக வுணர்த்தும். காவிரிப்பூம்பட்டினத்திற் கதிரவன் கோவில் இருந்தது. "உச்சிக் கிழான் கோட்டம்” (சிலப். கூ:கக). முற்றத் துறந்த முழு முனிவராகச் சொல்லப் பெறும் இளங்கோ வடி களே, தம் இயைபு வனப்புத் தொடக்கத்தில், "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்று மங்கல வாழ்த்துப் பாடினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/40&oldid=1428894" இலிருந்து மீள்விக்கப்பட்டது