பக்கம்:தமிழர் மதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் குறிஞ்சிநிலக் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும், வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும், முரூ கனுக்குப் பெயர்கள் தோன்றின. முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தின தனால், அவனுக்குக் கந்தன் என்னும் பெயரும் தோன்றிற்று. கந்து - தூண். கந்தம்= தூணம் (பெருந்தூண்). 16.0 ‘‘கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் என்று புறப்பாடல் (ருஉ) கூறுதல் காண்க. கற்றூண்களில் தெய்வ வுருவம் பொறிப்பதை, 'கந்திற் பாவை' என்னும் மணி மேகலைச் சொல்லாலும் (உக) அறிக. கந்து - கந்தம் -கந்தன். குறிஞ்சிநிலப் பறவை யாகிய மயி லை முருகனூர்தியாகக் கொண்டமையால், மயிலூர்தி, மயிலேறும் பெருமாள் என்னும் இலக்கிய வழக்கும் எழுந்தன. போர்மறஞ் சிறந்த சேவல் அவனுக்குக் கொடியாயிற்று. குறிஞ்சிநிலத் தலைவி கொடிச்சி யெனப்பட்டதனால், அதற் கேற்ப, முருகன் தேவி வள்ளி (கொடி) எனப்பட்டாள். தேனும் தினைமாவும் கள்ளும் இறைச்சியும், முருகனுக்குத் தொண்டகப் பறையறைந்து படைக்கப்பட்டன. முருகத் தெய்வ மேறி யாடுபவன், வேலேந்தியதனால் வேலன் எனப் பட்டான். அவன் கள்ளுண்டாடிய ஆட்டு வெறியாட்டு எனப் பட்டது. முருகன் கோவில்கட்குக் காவடி யெடுத்தல், அவனடி யார்க்கே சிறப்பாக வுரிய நேர்த்திக் கடன். முல்லைத் தெய்வம் முல்லை நிலத்தில், ஆடுமாடுகட்குப் புல் வளரவும், ஆயருண விற்கு வானாவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டிய தாயிற்று. மழை கரிய முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் என்று பெயரிட்டு வணங்கினர். "இன்னிசை யெழிலியை பிரப்பவு மியைவதோ (கலித்.ககூ) என்பதால், முகில் தெய்வமாக வணங்கப்பட்டமை அறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/46&oldid=1428899" இலிருந்து மீள்விக்கப்பட்டது