பக்கம்:தமிழர் மதம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலை யியல் "செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐயம் அருஅர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூம் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கின் எய்த லுண்டெனின் தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின் மாறிப் பிறப்பிள் இன்மையுங் கூடும் மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே.' ருஎ (புறம்.உகச). 'பிறவாராயினும்' என்பதில் உம்மை எதிர்மறை. "அசை நிலை என்று பழைய வுரை கூறுவது பொருந்தாது. இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்பதே குமரி நாட்டுத் தமிழர் கொள்கை. சுந்தர மூர்த்தி நாயனார் சங்கிலி பரவை யாராகிய தேவ கணிகையரொடு இன்பம் நுகர்ந்தது, இறைவ னுக் குடம்பாடென்று சொல்லப்படும் போது, இறைவன் வகுத்த முறைப்படி. கரணத்தொடு மணந்த கற்புடை மனைவியொடு இல் லறம் நடத்துவது, எங்ஙன் இறைவனுக்கு ஏற்கா திருக்கும்? மெய்ப் பொருளியல் சிவ மதத்திற்குக் கூறியதே கடவுட். சமயத்திற்கும். கடவுட் சமயம் துறவியர்க்கே உரிய தென்றும், இல்லறத் தார்க்கு உருவ வணக்கம் இன்றியமையாத தென்றும், தன் னலப் பிராமணப் பூசாரியரால், ஒரு தவறான கருத்து இற்றைத் தமிழ ருள்ளத்திற் புகுத்தப் பட்டுள்ளது. கிறித்தவரும் முகமதி யரும் உருவத் துணை யின்றியே இறைவனை வழிபட்டு வருகின் றனர். கற்றாருங் கல்லாருமான தமிழரும், வீட்டிலும் காட்டிலும் வழிப் போக்கிலும் துன்பம் நேர்ந்த விடத்து,அண்ணாந்து வானை நோக்கி "ஆண்டவனே!" அல்லது 'கடவுனே" என்று விளித்து வேண்டு தல் செய்வது; அல்லது ஒருவர் அறமுறை தவறி அட்டூழியஞ் செய்யும் போது, வானை நோக்கி, "அதோ போகிறானே, அவன் கேட்பான்." என்று முறையிடுவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/73&oldid=1428936" இலிருந்து மீள்விக்கப்பட்டது