பக்கம்:தமிழர் மதம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலை யியல் முருகனுக்கு மேலும், 'விநாயகன்' என்னும் ஆனைமுகவண்ை ஆனைமுக வசுரன் கதையாலும், வீரபத்திரனைத் தக்கன் வேள்வி யழிப்புக் கதையாலும், வைரவனைப் பிரமன் தலை கொய்வுக் கதையாலும், சிவன் மக்களாகப் படைத்துக் கொண் டனர் ஆரியர். அவர்களை மக்கள் என்னாது மேனி வடிவுகள் (மூர்த்தங்கள்) என்பர் சற்றுத் தெளிந்தோர். ஆயினும், நடைமுறையில் வேறுபா டொன்று மில்லையாம். எஎ இனி, சாத்தன் என்னும் ஐயனாரையும், சிவ மாலன் (சங்கர நாராயணன்) னும் புணர்ப்பில் தோன்றிய மகனாகக் கூறி, அவனை அரியரன் புதல்வன் (ஹரிஹர புத்ர) என்றனர். மேற் குறித்த கதைக ளெல்லாம் கட்டுச் செய்திகளே யன்றி, உண்மையாக நிகழ்ந்தவையல்ல. இறைவன் (சி வன்) வடி வான ஓங்காரம் வரிவடிவில் யானை யுருவத்தை யொத்திருப் பதால், அதினின்று தோன்றியதாகக் கூறிய வடிவை யானை வடிவாகவே காட்டி விட்டனர். மேலும், அதற்குப் பெருச் சாளியை (பெருத்த எலியை) ஊர் தி யாக்கினது, சிறுபிள்ளை யின் உத்திக்கும் பொருந்தாச் செய்தியாம். முளை மந்திரமான (பிரணவம் என்னும்) ஓங்காரத்தின் பொருள் தெரியாமையால், பிரமன் முருகனாற் குட்டப் பட்டான் என்பது இங்குக் கவனிக்கத் தக்கது. திருமால் அணங்கு (மோகினி) வடிவு கொண்டு சிவனுக்குத் தேவியானதால், அரி என்னும் பெயர் அரன் (சி வன்) என் பதன் பெண்பாலாகவும் இருக்கலாம். ஆயின், ஹரி என்னும் வடசொற்குப் பச்சை நிறத்தன் என்று பொருள் கூறுவர். பச்சையும் நீலமும் கருமைக்கு இனமான நிறங்க ளாதலாலும், திருமாலுக்குப் பச்சை (பச்சையன்) என்னும் பெய ருண்மை யாலும், ஹரி என்னும் சொற்குப் பச்சை யென்னும் பொருட் கரணியம் ஊட்டினது, தமிழ் வழக்கைத் தழுவிய தாகவே யிருத்தல் வேண்டும். பெருமாள் என்னும் திருமால் பெயர் பெருமகள் என்பதன் மரூஉ வாகக் கொள்ளற்கு இடந்தரு மேனும், பெருமால் (மகா விஷ்ணு) என்பதன் திரிபென்று கொள்வதே மிகப் பொருத்த மாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/93&oldid=1428961" இலிருந்து மீள்விக்கப்பட்டது