பக்கம்:தமிழர் மதம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் ச-ஆம் தோற்றரவுக் கதை, நர மடங்கல் வடிவாகச் செதுக் கிய கற்றூண், அதைப் பொன்னன் (இரணியன்) உதைத்த வுடன் அவன் மீது விழுமாறு, எளிதாய்ப் பொருத்தி அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட சூழ்ச்சி பற்றியதா யிருக்கலாம். அஉ ரு-ஆம் தோற்றரவுக் கதை, ஆரியரைப் போற்றா திருந்த மாவலி என்னும் மாபெருஞ் சேர வேந்தன் ஒரு படுகுழியில் வீழ்ந்து மறையுமாறு, ஒரு குள்ளப் பிராமணன் வாயிலாகச் செய்யப்பட்ட சூழ்ச்சி பற்றியதா யிருக்கலாம். சு-ஆம் எ-ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்தில் நிகழ்ந்தன என்பதும், ஒன்று இன்னொன்றை எதிர்த்துத் தோற்றது என்பதும், தோற்றது பிராமணக் குலத்திற் பிறந்து அரசர் வகுப்பை அழிக்கவே தோன்றிற்று என்பதும், உத்திக் குப் பொருந்தா தனவும் தன் மு.ரணானவும் தோற்றர விலக் கணத்திற்கு முற்றும் மாறானவு மாகும். அ-ஆம் கூ-ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்தில் நிகழ்ந்ததொடு அண்ணன் தம்பி முறைப்பட்டன வாகவும், அவற்றுள் மூத்தது மக்களினத்திற்குச் சிறந்த முறையிற் பயன் படாத தாகவும், இருந்ததனால், அம் மூத்தது தோற்றர விலக் கணம் இல்லதே யாம். இனி, ௧0-ஆம் தோற்றரவோ வெனின், அது கலியூழி முடிவில், சம்பளம் என்னும் சிற்றூரில், விட்டுணு எச்சன் (விஷ்ணு யஜ்ஞ) என்னும் பிராமணன் இல்லத்திற் குதிரை முகத்தொடு பிறந்து, அல்லவை தீக்கி அறத்தை நிலை நிறுத்து வதாம். இது ஒரு வகையிலும் ஒவ்வாத தேனும், இதன் தீர்ப் பைக் கலியூழி முடிவுக் காலத்தினர்க்கே விட்டு விடுவது நன்று. இதுகாறுங் கூறிய வற்றால், திருமாலை இயன்ற வரை ஆரி யத் தெய்வமாகக் காட்டுவதே, தோற்றரவுக் கதை நோக்கம் என்பதைத் தெற்றெனத் தெரிந்து கொள்க. (அ) தெய்வ வடிவு மாற்றம் பகீரதன் கதையாற் சடைமேற் கங்கையும், திங்கள் சாவம் பெற்ற கதையால் முடிமேற் பிறையும், நஞ்சுண்ட கதையாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/98&oldid=1428968" இலிருந்து மீள்விக்கப்பட்டது