பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. முதல் ஐந்நூறு. வாணிகம் 153 தமிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள் அனைத்திலுமான எல்லா இனங்களும், இன்றைய திருவாங்கூடரான, பர லியா (Paralia) ai gólu menj: கொண்டுவரப்பட்டனவும், அந்நாடுகளில் இறக்குமதி GeFirut tu - Gar (Peripius Page : 30). மதுரையில் ஒர் உரோமானியர் குடியிருப்பு : இந்தக் கால கட்டத்தில் மதுரையில், உரோமானியக் குடியிருப்பு ஒன்று இருந்தது. தென்னிந்தியாவின் பல இடங்களில், பொன், வெள்ளிகள் மட்டுமல்லாமல், உரோம நாணயங்களும் காணப்பட்டதால் "மதுரையில் நகருக்கு அணித்தாக உள்ள வெற்றிடங்களிலும், வெள்ளம் வற்றிப்போகும் காலத்தில், ஆற்றுமணல் மேடுகளிலும், எண்ணற்ற செப்பு நாணயங்களும் காணப்பட்டன, அந்நகரின் பல்வேறு இடங்களில், மண் மீதும், ஆற்று மணல் மேடுகளிலும் உரோமச் செப்பு நாணயங்கள் சிதறிக்கிடப்பது, இந்நாணயங்கள், ஆங்கு, அன்றாடப் பழக்கத்தில் இருந்து வந்தன, ஆங்குக் குடிவாழ்ந்திருந்த மக்களால், கவனக் குறைவால், போடப்பட்டன அல்லது தொலைக்கப்பட்டு விட்டன என்பதை அறிவுறுத்துவதாகத் தெரிகிறது (Journal of the Royal Asiatic Society 1906 Page : 610). இச்செப்பு நாணயங்கள், இவ்விடங்களுக்கு, உரோமானியர்களால், தங்களுடைய சொந்த உபயோகத் திற்காகவே கொண்டுவரப் பெற்றிருக்க வேண்டும், அவை, பொன், வெள்ளி நாணயங்களைப் போல, இந்தியக் கடைவீதிகளில், பொருளுக்கு விலையாகக் கொடுக்கும் நாணயமாகப் பயன்படுவதற்குக் கொண்டு வரப்பட்டிருக் காது. காரணம், அந்நாணயக்குவியலுக்குக் கப்பல்களில் இடம் காண்பது இயலாதாகிவிடும். மேலும், அக்காலத்தில், இந்தியா, தனக்கு வேண்டிய செப்பு முழுவதையும், தன் நாட்டுச் சுரங்கங்களிலிருந்தே பெற்றுக்கொண்டது; ஆகவே, இச்செப்பு நாணயங்கள், பாண்டங்களும், பிற பயனுள்ள பொருள்களும் செய்வதற்கு உருக்குவதற்காக, இறக்குமதி