பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 : r தமிழர் வரலாறு இடையில் சுற்றிக் கொண்டு, அது புடைத்துக் காணுமாறு அதன்மேல், மகளிராடையாம் சேலை போலும் நீண்ட உடையை இடைச்சுற்றளவே இருக்குமாறு, மடித்து மடித்துப் பாவாடை போல் சுருக்கித் தைத்து உடுத்துக்கொண்டு, அதன் மேல், மெய்ம்மறைய சட்டையும் அணிந்து, கண்ட அளவே அச்சம் ஊட்டும் தோற்றம் உடைய யவனர்" என்கிறது அப்பாட்டு. - - "மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து - வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்' - முல்லைப்பாட்டு : 59-61. ஆகவே, அவர்கள் அரண்மனைகளின் வாயில் காப்போ ராகவும் பணிபுரிந்தனர். "இயல்பாகவே அகன்று உயர்ந்து காவல் உடையதான மதில் வாயிலைக் காத்து நிற்கும் காவல் தொழிலில் சிறந்த, பகைவரைத் தப்பாது கொல்லும் வாளை 莒_臀 ஏந்திய யவனர்" என்கிறது. சிலப்பதிகாரம். "கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்" - சிலப்பதிகாரம் : 14: 66-67 தென்னிந்தியாவில் உரோமர் இராணுவப் பொறிகள் : வணிகர்கள், வீரர்கள் மட்டுமல்லாமல், எண்ணற்ற உரோமப் பொறியாளர்களும், கைவினைஞர்களும் தமிழ்நாட்டில் நிலைத்த குடியினராய் வாழ்ந்திருந்தனர். உரோமப் பொறியாளர்கள், தமிழ் அரசர்களுக்காகக், கோட்டை மதில்களைத் தகர்த்து அழிக்கவல்ல, உலோகப் பூனிட்ட பெருந்து லங்களையும், மதில் வாயிற் கண் பொறித்து வைக்கப்படும், பல்வேறு தற்காப்புப் பொறிப்படைகள்ையும் செய்து தந்தனர். தொல்காப்பியர், போரின் ஒரு நிலையாம் உழிஞைப் போரை விளக்குங்கால், கோட்டையை முற்றுகை செய்வதும், முடிவாகக் கைப்பற்றிக் கொள்வதும் எனக் கூறியுள்ளார். . :