பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் 217 செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப், பெளவம் மீமிசைப் பகல்கதிர் பரப்பி, வெவ்வெம் செல்வன், விசும்பு படர்ந்தாங்குப், பிறந்து, தவழ்கற்றதன் தொட்டுச் சிறந்த நன் நாடு செகின் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப, ஆளிநன்மான், அணங்குஉடைக் குருளை, மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி, முலைக்கோள் விடாஅ மாத்திரை, ஞெரேர்.எனத் தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு" - பொருநராற்றுப்படை (129-142). வெண்ணிப்போர் பற்றிய பாடற்பகுதி, இவ்வாறு தொடர்கிறது. இப்பாட்டின் பிற்பகுதியில், அவன் இளமைப் பருவத்து நிகழ்ச்சி ஒன்று மறைமுகமாகக் குறிப்பிடப் பட்டுளது. (முதியோர் "அவை புகு பொழுதில் தம் பகைமுரண் செலவும்" பொருநராற்றுபடை 187 - 188) முதியோர் இருவர் அவன் அறங்கூர் அவைக்குட் புகுந்து, தங்கள் இருவர்க்கிடையே எழுந்த வழக்கு ஒன்றை, அவன் முன் வைக்க, அவன் அவ்விருவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்ப்பை வழங்கினான். "அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்" - பொருநர் : 188, இலக்கிய வகையில், அத்துணை நிறை பயன் அளிக்காப் பாட்டு ஒன்றில், இந்நிகழ்ச்சியின் போது, தன்னுடைய தளி இளமைப் பருவத்தை மறைப்பதற்காக, நரைமயிர் கொண்டு - ஆக்கிய தலைமுடியை அணிந்து கொண்டான் என்பது குறிப் பிடப்பட்டுளது. "உரைமுடிவு காணான் : இளைமையோன்" என்ற நரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச் சொல்லான் முறை செய்தான் , சோழன், குலவிச்சை கல்லாமல் பாகம் படும். - - . . : . - பழமொழி : 25.