பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தமிழர் வரலாறு மைல் தொலைவு பின்னடைந்துவிட்ட இடமாம், மேற்குக் கடற்கரைக்கண் ஒய்வு கொண்டான். கொங்கணத்திற்கும், மலபாருக்கும், ராமன், வருகை தந்தது, பெரும்பாலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், கடலுக்கும் இடையில், நீண்ட ஒரு சிறு நிலப்பகுதியை நீர்மட்டத்திற்கு மேலே கொணர்ந்து விட்டு, கடல், சில மைல் பின்னடைந்து விட்ட காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆகவேதான், எண்ணற்ற புராணங்களில், கொங்கணம், மற்றும் மலபார்களின் மீட்சியோடு, பரசுராமன் பெயர் தொடர்புபடுத்தப்படுவது எழுந்துளது. வேத வேள்வி வழிபாட்டு முறையினைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு சென்ற முதல் இருடி பெரும்பாலும் பரசுராமன் ஆவன். கான்யகுப்ஜத்தைச் சேர்ந்த விசுவாமித்ரர், பரசுராமனின் சம காலத்தவர் ஆவர். இவர், தம்முடைய ஐம்பது மகன்களை, விந்தியத்திற்கு அப்பால் நாடு கடத்திய கதை முன்னரே கூறப்பட்டது. அந்த விசுவாமித்ரர்கள், ஆரிய வழிபாட்டு முறையினைத் தக்கண பாதத்தில் பரப்பினர். விசுவாமித்ரரின் நாடுகடத்தப்பட்ட மக்கள் குறித்து, திரு. டி. ஆர். பண்டர்கார் அவர்கள், வியத்தகு செய்தி ஒன்றைக் கொடுத்துள்ளார். "அவர்கள், ஆரிய நாகரிகத்தை, ஆதிப் பழங்குடியினரிடையே பரப்புவதற்காக அப் பழங்குடியினரை மணந்தனர்; அவர்களோடு தங்கு தடையின்றிப் பழகினர்" என அவர் கூறுகிறார். - முன் கோபியாகிய தந்தையால் சபிக்கப்பட்டபோது, விசுவாமித்ரர்கள் மணமாகாதவர்களாதலின், அவர்கள் தஸ்யூ மனைவிமார்களை மணந்தனர் என்பது ஒருவேளை உண்மையாக இருக்கவும் கூடும். ஆனால், தஸ்யூக்களை, நாகரிக மக்களாக மாற்றுவதற்காகவே மணந்தனர் என்பது, அறவே தேவையற்ற ஒரு கூற்று ஆகும். தஸ்யூக்கள் நாகரிக மற்ற பழங்குடியினர் அல்லர். வரலாற்று ஆசிரியர்கள் பலரும், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கலை நுணுக்கம் வாய்ந்த கைவினைப் பொருட்களிலும், பண்டைய