பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 தமிழர் வரலாறு கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நீவந்தோங்கு மரபின் தோரண வாயிலும், பொன்னினும் மணியிலும் புனைந்தன வாயிலும், நுண்வினைக் கம்மியர் காணா மரபின துயர்நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின இவைதாம் ஒருங்குடன் புணர்ந்து, ஆங்கு, உயர்ந்தோர் ஏத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம்". - சிலம்பு : 5 : 89 - 110. அடிக்குறிப்பு : (பரந்த இவ்வுலகில் எனும் பொருள்பட மூலத்தில், "இருநில மருங்கின்" என்ற தொடர் வந்துளது. ஆனால், உரையாசிரியர், "இருநில மருங்கின்" என்றது மேற்கும், தெற்கும் எனக்கொள்க; என்றது, சேர, பாண்டியருடைய நாடுகளை" என விளக்கம் அளித்துள்ளார். இது, வலிந்து கொண்ட பொருளாம்.) (இப்பகுதியில், கரிகாலன் என்ற பெயர் இடம் பெறவில்லை. ஆனால், திருமகள் அருள்பெற்ற சிறந்த சோழ மன்னன் எனப் பொருள்படும் திருமாவளவன் என்பதுதான் இடம் பெற்றுளது. பட்டினப்பாலையில், (299) கரிகாலனுக்கு, இச்சிறப்புப் பெயர்தான் கொடுக்கப் பட்டிருப்பதால், இதில் வரும் அத்தொடர் (திருமாவளவன்) கரிகாலனைக் குறிப்பதாகக் கொள்ளலாம். 58ஆம் எண் புறநானூற்றுச் செய்யுளின் கொளு "அப்பாட்டு, "சோழன், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துத் காரிக் கண்ணனார் பாடியது"