பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் - - 259 கரிகாலனுக்கு நற்சோனை ஈன்ற மகன் என்றும் கூறப் பட்டுள்ளான். "குமரியொடு வடவிமையந்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்று ஏழ்பரி நெடுந்தேர்ச் சோழன் தன் மகள் நற்சோனை ஈன்ற மக்கள் இருவர்". (பதிகம் : அடியார்க்கு நல்லார் உரை) "குமரியொடு வடவிமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்" (இருபத்தொன்பதாவது, வாழ்த்துக் காதை, உரைப்பாட்டுமடை), ஆகவே, அவ்வுரைக் கூற்றுக்கள், வரலாற்றுச் சான்றுகளாக ஏற்கத் தக்கனவாயின், கரிகாலன், செங்குட்டுவனின் தாய்வழிப் பாட்டன் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று ஆகிறது". , நான் தேடிப்பார்த்த அளவில், பழைய, புதிய பாடல் எதுவும், எந்த ஒரு பழைய பாட்டுக்கான உரை எதுவும், கரிகாலனுக்கும், செங்குட்டுவனுக்கும் இடையிலான உறவு எதையும் கூறவில்லை. ஆகவே, செங்குட்டுவன், கரிகாலனின் பெயரன் (சோழ மன்னனோடு யாதேனும் ஓர் உறவுடையான்) என்பது, கரிகாலன் குறித்த, நவீனக் கட்டுக் கதையே, அதைக் கட்டிவிட்டவர் யார் என்பதை நான் அறியேன். திரு. கனகசபை அவர்கள், "கரிகாலன் மகள், சேர அரசன் இரண்டாம் ஆதனுக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டுச், சேரன் செங்குட்டுவனுக்குத் தாய் ஆனாள்" என முடிந்த முடிபாகக் கூறுகிறார். (ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முந்திய தமிழர், பக்கம் : 72) இதற்கு ஆதாரமாகச், சிலப்பதிகாரம் முப்பதாவது காதை 173 - 183 வரிகளை அவர், சான்று காட்டுகிறார். தேவந்திமேல் தெய்வமுற்று வந்த இமையோர் இளங்கொடி உரைத்ததையே, சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளாரும் திரும்பக் கூறுவதை மட்டுமே, இப்பகுதி கூறுகிறது. அது கூறியது இது "உன் தந்தையின் தாள் நிழலில் இனிது இருந்தோனே!. "அரியணையில் அமரும் ஊழ், மூத்தோனாம் செங்குட்டு வனுக்கு இல்லை. உனக்கே உண்டு" என, வருவது உரைக்கும் நிமித்தின் கூற, அவனைச் சினந்து நோக்கிச், கொங்கவிழும் கடிமணமலர் களால் ஆன மாலை அணிந்த, வெற்றிக்