பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலன் f 297 வழிபாடு, அவள் பிறந்த மண்ணாம் சோணாட்டிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும். ஆகச் செங்குட்டுவன் காலத்திற்குப் பின்னர்ச் சோணாட்டின் மீது படையெடுத்துச் சென்ற கயவாகு, ஆங்குப் பத்தினித் தெய்வத்தின் காலணியைக் கைக்கொண்டதில் வியப்பு இல்லை. ஆகவே, அச்செயல், செங்குட்டுவனைக் கயவாகுவின் காலத்தவன் எனக் கொள்வதற்குத் தடையாக நிற்கிறது என்பதில் நியாயம் இல்லை. - செங்குட்டுவனைக் கயவாகுவின் காலத்தவனாகக் கொள்வதற்குத் தடையாகத் திரு. அய்யங்கார் எடுத்து வைக்கும் கடைசி வாதம், கயவாகு என்பதற்குப் பிறிதொரு பாடமாகக் "காவல்" என்பது சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டிருப்பது. . . "கயவாகு காலத்தவன் என்ற முடிவு மேற்கொள்வதற்கு ஆதாரமாக இருக்கும் கயவாகு என்ற சொல்லிற்குச் சிலப்பதிகாரத்தில் பிறிதொரு பாடமும் கொடுக்கப்பட்டு ள்ளது. அது, கயவாகுவிற்குப் பதில் "காவல்" என்பதாம். “காவல்" என்பதே பாடமாயின், கயவாகுவின் சமகாலம் என்ற முடிவின் மீது கட்டப்பட்ட, கருத்து மாடங்கள் அனைத்தும் அடியோடு சரிந்து மண்ணாகிப் போய்விடும். “There is an alternative reading to the word kayavagu in the passage of the Silappadigaram, on which all this contention about the “Gajabahu synchronism” is based. That reading is "Kaval” instead of Kayavagu. If Kaval is the correct reading, down falls to the ground all the edifice of the theories based on the “Gajabahu Synchronism", (History of the Tamils, Page:381) grass of aff கூறுவது காண்க. தமிழக வரலாற்றுக் கால எல்லையை உறுதி செய்யும் ஒரே சான்றாகப் பாடபேதத்திற்கு உள்ளான ஒரு சொல்லை மேற்கொள்வது ஏற்புடையதாகாது என்பது அவர் வாதம். "கயவாகு", "காவல்" இவ்விரண்டனுள் உண்மையான பாடம் எது? சிலப்பதிகாரப் பதிப்பாசிரியர் திரு. உ. வே.