பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 44? தமிழர் வரலாறு கான கல்லைக் கொள்வான் வேண்டிக், காற்று விரைந்து வீசும் காடுகளை அம்புபோல் விரைந்து கடந்து, ஆரிய அரசர்களை வென்று, பெரும் புகழ் வாய்ந்ததும், இனிய பல அருவிகளைக் கொண்டதும் ஆன கங்கையில் நீராடி, அந்நாட்டவர்க்குரிய ஆனிரை பலவற்றை, அவற்றின் கன்றுகளோடு கைக்கொண்டு, தோல்வி கானா வலிய விற்படையுடைய இடும்பில் எனும் இடத்தில் பாடிகொண்டு, வலிய புலியொத்த வீரர்கள வீழ்ந்து மடிய, சிறுசிறு கொத்துகளான நெய்தல் மலர் நிறைந்த வியலூரைத் துள்துள்ளாக அழித்து, அடுத்த கரை அடைந்து, கொடுகூரை வென்று அழித்து, மோகூர்ப் பழையன் காத்து நிற்கும் அவன் காவல் மரமாம் கரிய கொம்புகளைக் கொண்ட வேம்பினை வெட்டி வீழ்த்தி, களத்தில் கணவரை இழந்தமையால், தம் அணிகலன்களைக் கழற்றி எறிந்துவிட்ட நல்ல பல மகளிரின் அடர்ந்து பெருகிய கூந்தலால் ஆன கயிறு கொண்டு, வேம்பு மரத்துண்டங்கள் ஏற்றிய வண்டியில் யானைகளைப் பூட்டி ஈர்த்துப் பேராண்மை வாய்ந்த பெரிய போர்க்களத்தில், சோழர் குடிவந்த ஒன்பதின்மர் வீழ்ந்தொழிவான் வேண்டி நேரிவாயில் எனும் இடத்தே பாடிக்கொண்டான். "கடவுள் பத்தினிக் கல்கோள் வேண்டிக், கால் நவில் காணம் கணையிற் போகி, ஆரிய அண்ணலை வீட்டிப், பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி, இனம் தெரி பல்லான் கன்றொடு கொண்டு, மாறா வல்வில் இடும்பில் புறத்திறுத்து, உறுபுலி அன்ன வயவர் வீழச், சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி, அக்கதை நண்ணிக் கொடுகூர் எறிந்து, பழையன் காக்கும் கருஞ்சனை வேம்பின் முழாரை முழுமுதல் துமியப் பண்ணி, வால் இழை கழிந்த நறும்பல் பெண்டிர்