பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழர் வரலாறு கூட்டத்திலிருந்து வேறுபடுத்தி வைக்கப்பட்டனர். தென்னிந்தியாவில், மலபார் நாகர்களின் தலைமையிடமாக இருந்தது. இதுவே அந்நிலைமை என்பதை உணர்ந்த, புத்த ஜாதகாவிலிருந்து இரண்டு குறிப்புகளைக் கீழே கொடுக்கின்றேன். கிறித்துவுக்குப் பிறகு, முதல் ஆயிரத் தாண்டின் முற்பாதியின் பிற்பாதி காலத்தைச் சேர்ந்த, பத்துப்பாட்டில், கரைக்குக் கடல் அலைகள் கொண்டு வந்து சேர்த்ததால் திரையன் எனப் பெயர் குட்டிப் பாராட்டப்பட்ட ஒர் இளவரசன் குறிப்பிடப்பட்டுள்ளான். "அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன்" (பெரும்பாணாற்றுப் படை 30-31). இப்பாட்டின் உரையாசிரியர், நாகப் பட்டினத்துச் சோழ அரசன் ஒருவன் பாதாளம் சென்று, அங்கு ஒரு கன்னிகைபால் காதல் கொண்டான். அங்கு அவர்க்குப் பிறந்த மகளை அவள், அவன்பால் திரைவழியாக அனுப்பி வைத்தாள் என்ற ஒரு கட்டுக்கதையைக் கூறி இத்தொடர்க்குப் பொருள் கூறியுள்ளார். "நாகப் பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று, நாகக்கன்னிகையைப் புணர்ந்த காலத்து, அவள், யான் பெற்ற புதல்வனை என்செய்வேன் என்றபொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலேவிட அவன் வந்து கரையேறின், அவற்கு யான் அரசவுரிமை செய்வித்து நாடாட்சி கொடுப்பன் என்று அவன் கூற, அவளும் புதல்வனை அங்ங்னம் வரவிடத் திரைதருதலின் திரையன் என்று பெயர் பெற்றதைக்கூறினார்". (மேற்படி உரை) இது தமிழர்கள், இந்தியாவின் தெற்குக் கடற்கரைகள் வழியே நாகர் உலகோடு தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை உணர்த்துகிறது. பத்துப் பாட்டுக்காலத்திலும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த மணிமேகலையில், மற்றொரு சோழன், ஈங்குக் காவிரிப்பூம்பட்டினத்துக் காவலன் நெடுமுடிக்கிள்ளி என்பான் தன் தலைநகரைச் சார்ந்த ஒரு சோலையில் ஒரு நாகக்கன்னிகையைக் கண்டு காதல் கொண்டான். ஒரு திங்கள் கழித்து அவள் மறைந்து விட்டாள். சிலகாலம் கழித்து அவள் அவர்களுக்குப் பிறந்த