பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தமிழர் வரலாறு

தனி தலைவர்களைக் கொண்ட வானரங்களுக்கு உரியதான, தண்டகாரண்யத்தின், அடர்ந்த பருமரக் காடுகள் நிறைந்த உட்பகுதியாம் சில மாவட்டங்கள் தவிர்த்து, தென் இந்தியா முழுவதும், இராவணனின் ஆட்சிக்கீழ் இருந்தது என உய்த்துணர அமைந்துள்ளது. பிறர் வாழப் பொறாதவனும் அனைத்து வகையாலும் ஆ ற் ற ல் வாய்ந்தவனுமான இராவணன், தன் வாயிலுக்கு அணித்தாகப் பாண்டியர் பெருஞ் செல்வாக்கோடிருப்பதை ஒருகணப் போதும் பொறுத்துக்கொள்ளமாட்டான், மேலும் அந்நாட்களில், பாண்டியர், ஆட்சியாளர்களாக இருந்திருப்பின், இராவண னுக்கும், இராமனுக்கும் நடைபெற்ற பெரும் போரில், அவர்கள், எந்தப் பக்கமும் சேர்ந்துகொள்ளாதிருந்திருப்பது, நம்புதற்கு அரியதாகும். மேலும், இந்த மாவட்டங்களும், எந்த நாட்டின் கடற்கரையிலிருந்து, இராமன் கடல் கடந்து இலங்கைக்குச் சென்றானோ அந்தப் பாண்டிய நாடும், இந்தியாவின் தென்கோடியில் நடைபெற்ற இராமனுடைய பாத யாத்திரையை விளக்கிக் கூறும் பகுதியில் குறிப்பிடப்பட வில்லை. இராமன், தன்னுடைய புகழ்பெற்ற பாலத்தைப் பாண்டிய நாட்டிலிருந்தே கட்டத் தொடங்கினான். பாண்டி யர்கள், அவன் காலத்தில் இருந்திருப்பாராயின், அது, அப் பாட்டில், இதுபற்றிக் கூறும் பகுதியில் குறிப்பிடப்பட் டிருக்கக் கூடும்.

   ஆகவே, இராமாயண காலத்திற்குப் பிறகு, இராவண னுடைய ஆட்சி மறைவின் பயனாகச் சோழ, சேர, பாண்டியப் பழம்பேரரசுகள் எழுந்தன என நான் சொல்கின்றேன். இராமாயணத்தில், பாண்டியர், அல்லது மூன்று அரசுகளுடன் அனைத்தும் பற்றிய குறிப்பீடுகள், அக்கதையில் அப்பாட்டின் இரண்டாம் வரைவில் கி. மு. முதலாம் ஆயிரத்தாண்டில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 

அகத்தியர் :

இராமாயணம் குறித்து மற்றுமொரு கருத்து ஈண்டு ஆராய்தற்குரியது. விதர்ப்ப நாட்டு இளவரசி லோபா