பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தமிழர் வரலாறு

கடன் வாங்கி வழங்கப் பெறும் சர்க்கரை எனும் சொல், தொடக்கத்தில் மணல் எனும் பொருள் உடையது. கற்கண்டுத்தூள் மணல் போல் காட்சி அளிப்பதால், அப்பெயர், கற்கண்டுத்தூளுக்கும் இடப்பட்டுவிட்டது. தொடக்கத்தில் கரும்பு எனும் பொருளுடையதான அக்காரம் என்ற சொல், ஆகுபெயராக, அக்கரும்பிலிருந்து பெறப்படும் பொருள்களாம் வெல்லம் சர்க்கரைக்கும் பெயராகி விட்டது. சீனாவில் உற்பத்தியானது எனும் பொருளில் அது, சீனி என்றும் அழைக்கப்படும். பட்டும், சர்க்கரையும், தொடக்கத்தில், நறுமணப்புகை தருபொருள்கள், சிகப்புப் பவழம், (Costus) , மிளகு ஆகிய இப்பண்டங்களுக்காக மாற்றிக் கொள்ளப்பட்டன. தென் இந்தியர் சீனாவுக்கும், மேற்கு ஆசியாவுக்கும் இடையில் வணிக இடைத் தரகர்களாகவும் செயல்பட்டனர். வழக்கமான கடல்வழி, கோதன் (Khotan) வழியாகவே இருந்து வந்தது. ஆனால் அடிக்கடி திகழ்வதுபோல், துருக்கிப் பழங்குடியினரின் திடீர்த் தாக்குதல்கள் காரணத்தால், வணிகப்பாதை, தெற்குக்கு மாறித் தமிழ்நாட்டுத் துறை முகங்கள் , மேற்கு ஆசியாவுக்கும், கிழக்கு ஆசியாவுக்கும் இடையிலான சந்திக்கும் இடமாகிவிட்டன.