பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி மு. 1000 - 500

209

கோயமுத்துTர், சேலம் மாவட்டங்களின் உள்நாட்டுப் பொருளாம் இச் சந்தன மரம், குஜராத் மாநிலத் துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து, அரேபியா வழியாகச் சிரியாவுக்கு ஏற்றி அனுப்பப்பட்டிருக்க வேண்டும்: ஒபீரிடமிருந்து (Ophir) எடுத்துக்கொண்ட பொன்னில், முழுமையும் இந்திய நாட்டுப் பொன்தானா, அல்லது ஒரு பகுதிதானா என்பது ஒபீர் பற்றிய வாதத்தின் முடிவாம், விளக்கத்தைப் பொறுத்துளது. ஆனால், சாலமன் மிகப் பெரிய அளவிலான பொன் பெற்றிருந்தமையால், அவனுடைய அப்பொற்களஞ்சியத்தின் ஒரு பகுதி, இந்தியாவிலிருந்து பெறப்பட்டதாதல் கூடும் [1 Kings. x : 14- 17 and 21;] "ஹிராம் (Hiram) கப்பற்படையோடு தார்ஷிஷ் (Tharshish;) கப்பற் படையொன்றையும், அரசன் கடலில் பெற்றிருந்தமையால், தார்ஷிஷ் கப்பற்படை மூன்றாண்டுக்கொரு முறை பொன், வெள்ளி, தந்தம், வாலில்லாக் குரங்கு, மயில்களோடு, வந்து சென்றது என மேலும் அறிகிறோம்" [ | King X. 22] "அரசன் தந்தத்தினால் ஒரு பெரிய அரியணை செய்து, அதன் மேற்பரப்பைச் சிறந்த பொன்கொண்டு பூசி மெருகிட்டான்" (1, King X 12] எபிரேபி மொழி "ஹபின்", எகிப்திய மொழி "எபு" ஆகிய இரு சொற்களுமே, சமஸ்கிருத "இப்ஹ" என்ற சொல்லிலிருந்து பிறந்தன வாதலையடுத்துத், தந்தத்தைக் குறிக்கும் "ஈஷன் ஹபின்" என்ற எபிரேய மொழிச் சொல், யானையின் பல் எனும் பொருள் தருவதான "இப்ஹ தந்த" என்ற சமஸ்கிருதச் சொல்லின் மொழி பெயர்ப்பாகக் கொள்ளப்படுமாதவலின், அவ்வாறு வந்த தந்தங்களில் ஒரு பகுதி, இந்தியாவால் கொடுக்கப்பட்டது என்பது உண்மையாதல் கூடும்: ["எல் (el) என்பது, அராபிய மொழியில், சொற்களின் முன் இணைக்கப்படும் இடைச்சொல்லாதலின் "எல்-எயாஸ் {El-ephas) என்ற கிரேக்கச் சொல் "எபு" (ebu) என்பதிலிருந்து பிறந்ததாம்.] பிற்காலத்தில் நிகழ்ந்தது போலவே, வாலில்லாக் குரங்குகளும், மயில்களும், ஆசைக்கு வளர்க்கும் உயிரினங்களாக, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டன" எபிரேய மொழி

த.வ-14