பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

தமிழர் வரலாறு

மற்றும் பாண்டி நாட்டுத்தலைலர்கள் என்ற இரு பொருளும் உடையதாகும். உ.ம் : "தென்பரதவர் மிடல்சாய" (புறம் : 378 : 1) "தென் பரதவர் பேரேறே" (மதுரைக் காஞ்சி:1441. இப்பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்களும், தொழில்களும், அவர்கள் வாழ்ந்த சுற்றுச் சூழல், அவர்கள் மீது செலுத்திய ஆட்சியின் நேரிடைப் பயனாம். ஆகவே, அவர்தம் இயல்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு வெளியே உள்ள ஓர் இடத்திலிருந்து வந்தவர்களாக அவர்களைக் கொண்டுவரக் காட்டும் கற்பனை மாடங்கள் அனைத்தும், நேர்மைக்கு மாறான காரணங்களின் எடுத்துக்காட்டுக்களாம்.

மகதப் பேரரசு :

கி.மு. 400 அளவில், மகாபத்ம நந்தன், மகதத்தின் அரசன் ஆனான். அவன் சத்திரியர்கள் அனைவரையும். பூண்டோடு அழித்துவிட்டான். அவன் காலத்திற்குப் பிறகு, சூத்திரர் வழிவந்தவரே, நாட்டில் சிறந்தோங்கியிருந்தனர். அவன் இந்தியா முழுமைக்குமான தனி அரசன் ஆனான். பேரரசின் ஒரே வெற்றிக் கொடைக்கு உரியவன் ஆனான்; ( "சர்வ சத்ராந்த கொன்பஹ் ததஹ் ப்ரப்ற்தி ராஜானொ, ப்ஹவிஷ்யஹ் சூத்ர யொனயஹ் எகராத் ச மகாபத்ம எக ச் ஹத்ரஹ்" (Pargiter : Dynasties of Kali Age : Page : 25) அந்நாள் முதல், மகத அரசர்கள், ஆரிய நாகரீகத்திற்கு அந்நாள் வரை அடிமைப்படாத மக்கள் வாழ்ந்திருத்த தமிழ் நாடு தவிர்த்த இந்தியப் பெருநிலப்பரப்பு முழுமைக்கும் தனிப். பேரரசர்களாக உரிமைகொண்டனர். தம் உரிமையை நிலை நாட்ட, தஷிண பரதத்தின் மீது மேற்கொண்ட படையெடுப்பு எதையும் கேட்டிலம் ஆதலின், மகதப் பேரரசின் தனி ஆட்சி உண்மை, அசோகன் இறக்கும் காலம் வரை ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தது. கலிங்கத்தில், நந்தர்களால், ஒரு பாசனக் கால்வாய் வெட்டப்பட்டிருந்தது ஆதலின், ஏனைய மாநிலங்களோடு, கலிங்கமும், மகத அரசின் கீழ் இருந்தது. ஆகவே, அசோகன், கலிங்கக்தில் மேற்கொண்ட போர், உள்நாட்டுக் கலவரம் காரணமாகவே ஆதல் வேண்டும். அசோகன் அரச