பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

தமிழர் வரலாறு

மேய்ச்சல் நிலத்தில் :

மலைநாட்டு மக்கள் நடத்துவது போன்ற இன்ப வாழ்க்கையைக் கால்நடை ஒம்புவோராகிய ஆயர்களும், முல்லை நிலத்தில் நடத்தி இன்புறுவர். “புன்செய் நிலங்களாம் கொல்லைகளில் குடிவாழும் ஆயர்களுக்கு உரிமையுடையதான சிறிய புனத்தில் வளர்ந்து நிற்கும் குறுகிய கிளைகளைக் கொண்ட குராமரத்தின் குவிந்த கொத்தில் உள்ள வெண்ணிற மலர்கள், ஆடுகளை மேய்க்கும் இடைமகன் அணிந்து மகிழும் வண்ணம் மலரும்”.

“கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங்கால் குரவின் குவியினர் வான்பூ
ஆடுடை இடையன் சூடப் பூக்கும்.”
- நற்றிணை 266 : 1.3


“பாறைபடுதயிர் என்பதுபோல் நன்றாக முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலர்போலும் மெத்தென்ற கையினால், தயிர்க் கறைபோகக் கழுவிய கையினால் மட்டுமே தொடத்தக்கதான உயர்ந்த ஆடையைக், கணவனுக்காம் உணவை விரைந்து, முடிக்கும் ஆர்வ மிகுதியால், கழுவாமலே எடுத்து உடுத்துக் கொண்டு, குவளைமலர் போன்ற மை உண்ட கண்களுள் தாளிப்புப் புகை புகுந்து தாக்க, தானே சமைத்து முடித்த புளிக்குழம்பைக், கணவன், இனிது இனிது எனக் கூறியவாறே மகிழ்ந்து உண்ணக் கண்ட அவ்விளமகளின் ஒளிவீசும் முகம், புறத்தே புலனாகாவாறு அகத்துக்குள்ளாகவே அகமிக மகிழும்”.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்,
கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக்,
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்,

தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்